"எனக்கு பிலிப் ஹியூஸ் தான் நினைவுக்கு வந்தார்" - காயம் குறித்து பேசிய ஸ்மித்!

Updated: 28 August 2019 19:02 IST

அடிப்பட்டதை குறித்து பேசிய ஸ்மித், தனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்த தன்னுடைய அணியின் வீரர் பிலிப் ஹியூஸ் குறித்து தான் முதலில் நினைவு வந்ததாக ஸ்மித் கூறினார்.

Steve Smith Thought Of Phil Hughes After Being Hit By Jofra Archer Bouncer
லார்ட்ஸில் நடந்த போட்டியில் நான்காவது நாளில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித் மீது பட்டது. © AFP

ஆஷஸ் போட்டியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் வெளியேறினார். லார்ட்ஸில் நடந்த போட்டியில் நான்காவது நாளில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித் மீது பட்டது. இதனால், அவர் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார். பாதுகாக்கப்படாத கழுத்தில் அடிபட்டதற்கு ஸ்மித் தாமதமாக மூளையதிர்ச்சி அடைந்ததாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது, பின்னர் அவர் ஹெடிங்லி டெஸ்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. மாஸ்செஸ்டரில் நடக்கவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ஸ்மித் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்பட்டதை குறித்து பேசிய ஸ்மித், தனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்த தன்னுடைய அணியின் வீரர் பிலிப் ஹியூஸ் குறித்து தான் முதலில் நினைவு வந்ததாக ஸ்மித் கூறினார். "என் மனதில் சில விஷயம் ஓடிக்கொண்டிருந்தது, எனக்கு அடிப்பட்ட நேரத்தில் சில கடந்து கால விஷயங்கள் நினைவுக்கு வந்தன. நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்," என்று ஸ்மித் கூறினார்.

"அதுதான் முதல் விஷயம் என் நினைவுக்கு வந்தது"

"அதன்பிறகு தான், நான் நன்றாக உள்ளேன். கொஞ்சம் சோகமாக இருந்தேன் ஆனால், மதியத்துக்கு மேல் நான் நன்றாக இருக்கிறேன் என்று புரிந்தது," என்றார்.

மூன்று இன்னிங்ஸில் 144, 142 மற்றும் 92 ரன்கள் எடுத்து, இதுவரை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை லீட்ஸில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத சதம் உதவியதால் ஆஷஸ் தொடர் இப்போது சமமாக உள்ளது.

நான்கவது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட்டில் வரும் செப்டம்பர் 4ம் தேதி தொடங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement