Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!

Updated: 16 September 2019 19:42 IST

ஆஷஸ் 2019ல் அவரது ஓட்டம்  இங்கிலாந்து ரசிகர்களை அமைதியாக்கியது மட்டுமல்லாமல், பல சாதனைகளையும் மைல்கற்களையும் அடைய உதவியது.

Steve Smith, Records And Milestones During Series
ஸ்டீவ் ஸ்மித் மூன்று சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் உட்பட 110.57 சராசரியாக 774 ரன்கள் எடுத்தார். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டு, மீண்டும் டெஸ்ட் தொடரில் இணைந்து, ஆஷஸ் தொடரில் தன்னை நிரூபித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் மூன்று சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் உட்பட 110.57 சராசரியாக 774 ரன்கள் எடுத்தார். ஆஷஸ் 2019ல் அவரது ஓட்டம்  இங்கிலாந்து ரசிகர்களை அமைதியாக்கியது மட்டுமல்லாமல், பல சாதனைகளையும் மைல்கற்களையும் அடைய உதவியது.

ஆஷஸ் 2019ல் மொத்தம் 774 ரன்களுடன், ஸ்மித் 21ம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த முந்தைய சாதனையை முறியடித்தார். முன்னதாக 2014-15ல் இந்தியாவுக்கு எதிராக 769 ரன்கள் எடுத்திருந்தார்.

2017 முதல் 2019 வரை, ஸ்மித் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட அரைசதங்களை பதிவு செய்துள்ளார். இது ஒரே அணிக்கு எதிராக தனி பேட்ஸ்மேன் செய்த சாதனை. பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சாம் உல் ஹக் இதற்கு முன்பு 2001 முதல் 2006 வரை இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஒன்பது அரைசதங்கள் பெற்ற சாதனையைப் படைத்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் எடுத்ததை ஸ்மித் சமன் செய்தார். 1971 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன்கள் எடுத்தார்.

டான் பிராட்மேன், கவாஸ்கர், பிரையன் லாரா, எவர்டன் வீக்ஸ் மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோருடன் ஒரு தொடரில் 700 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இணைந்தார்.

ஆஷஸ் 2019ல் ஆஸ்திரேலியாவின் தொடரின் வீரராக ஆனதற்காக ஸ்மித் காம்ப்டன்-மில்லர் பதக்கத்தைப் பெற்றதில் எந்த ஆச்சரியமில்லை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement