Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!

Updated: 16 September 2019 19:09 IST

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் போது கண்ணாடி அணிந்ததற்காக நிறைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்மித், இங்கிலாந்தின் ஜாக் லீச்சை அவர் பின்பற்றுகிறார், அவரை கேலி செய்கிறார் என்று கருதினர்.

Steve Smith, Jack Leach Play Down "Spectacles" Controversy After Ashes Draw
மூன்று சதங்களுடன், மூன்று அரைசதங்கள் உட்பட 110.57 சராசரியுடன் 774 ரன்கள் எடுத்தார் ஸ்மித். © Twitter

ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் "கண்ணாடி" சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் ட்ராவானது. ஆஷஸ் தொடரை தக்கவைத்துக்கொள்ள மான்செஸ்டரில் நடந்த நான்காவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற பிறகு, இணையத்தில் வைரல் புகைப்படங்களில் கொண்டாட்டத்தின் போது ஒரு ஸ்டீவ் ஸ்மித் கண்ணாடி போட்டிக்கொண்டு வேடிக்கையான முகங்கள் வைத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் போது கண்ணாடி அணிந்ததற்காக நிறைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்மித், இங்கிலாந்தின் ஜாக் லீச்சை அவர் பின்பற்றுகிறார், அவரை கேலி செய்கிறார் என்று கருதினர்.

ஆங்கில ஊடகங்களில் பல்வேறு தகவல்களின்படி, 30 வயதான ஸ்மித்  "ஒரு அணியினருக்கு நடுவில்" இடது கை பேட்டிங் செய்தது போன்ற நிழல் தென்பட்டது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும்படி, அதுவும் கண்ணாடி அணிந்து, "எல்லா நேரத்திலும் சிறந்த வீரரான" லீச்சுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

"எல்லா நேரத்திலும் சிறந்தவர் - மற்றும் ஸ்டீவ் ஸ்மித். சிறப்பான ஆஷஸ் தொடருக்கு வாழ்த்துக்கள் #Ashes series @stevesmith49. லீச்சிக்கு கண்ணாடி பிடிக்கும்," இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய பக்கம் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டது.

சில ரசிகர்கள் இந்த பதிவில் ஆச்சரியத்துடன் பதிலளித்தனர், இணையத்தில் உருவாக்கும் கதைகளை வீரர்கள் எப்போதும் கண்டுகொள்வதில்லை.

பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக 12 மாதங்கள் ஸ்மித் கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கப்பட்டார்.

ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸ் 2019ம் தொடரில் மூன்று சதங்களுடன், மூன்று அரைசதங்கள் உட்பட 110.57 சராசரியுடன் 774 ரன்கள் எடுத்த பிறகு தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறைந்தது. முன்னதாக 2014-15ல் இந்தியாவுக்கு எதிராக 769 ரன்கள் எடுத்திருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement