"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!

Updated: 16 September 2019 19:11 IST

2019ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக செயல்பட்ட பிறகு, இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் அவரை எழுந்து நின்று பாராட்டினர்.

"Bat Is Mightier Than Sandpaper": Steve Smith Departs To Standing Ovation From English Fans. Watch
இங்கிலாந்து ரசிகர்கள் உட்பட அனைவரும் ஸ்மித்தை எழுந்து நின்று பாராட்டினர். © AFP

2019ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக செயல்பட்ட பிறகு, இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் அவரை எழுந்து நின்று பாராட்டினர். பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக உலகக் கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆஷஸ் தொடரின்போது, இங்கிலாந்து ரசிகர்கள் தொடர்ந்து ஸ்மித் மற்றும் வர்னரை குறிவைத்தனர். இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸ் 2019ம் தொடரில் மூன்று சதங்களுடன், மூன்று அரைசதங்கள் உட்பட 110.57 சராசரியுடன் 774 ரன்கள் எடுத்த பிறகு தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறைந்தது. கடைசி ஆஷஸ் போட்டியில் ஸ்மித் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து ரசிகர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். 

பிரபல ஆங்கில பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனும் இதை கவனத்தில் கொண்டு, "பேட், உப்புத்தாளை விடவும் வலிமையானது" என்று ட்விட் செய்துள்ளார்.

ஓவலில் ஸ்மித் 23 ரன்கள் எடுத்தது ஆஷஸ் 2019ல் அரைசதம் எட்டுவதற்கு முன்பு ஆட்டமிழந்தது இதுவே முதல்முறை.

ஆஷஸை ஆஸ்திரேலியா ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டாலும், ஸ்மித்தின் ஆட்டமிழப்பு, ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பாகவே இருந்தது. 399 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி கொண்டிருந்த ஆஸ்திரேலியா, ஸ்மித் அவுட் ஆகும்போது, 85/4 என்ற நிலையில் இருந்தது.

பேட்டிங் மட்டுமல்ல ஃபீல்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இறுதி ஆஷஸ் டெஸ்டின் மூன்றாவது நாளில், ஸ்மித் கிறிஸ் வோக்ஸை அவுட் செய்ய அவரின் வலது பக்கம் தாவி குதித்தார்.

ஆஷஸ் தொடருக்கு பின், ஆஸ்திரேலியா இலங்கை அணியுடனான மூன்றுபோட்டிகள் கொண்ட டி20  தொடரில் சந்திக்கவுள்ளது. இது அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement