தடை... காயம்... எல்லாம் முடிந்து ஐபிஎல் தொடருக்கு திரும்பும் வார்னர் மற்றும் ஸ்மித்

Updated: 01 March 2019 16:20 IST

பங்களாதேஷ் ப்ரீமியர் போட்டிகளின் போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்மித் தொடரிலிருந்து விலகினார்.

Steve Smith Back In Nets After Elbow Surgery, Hopes To Return With IPL - Watch
வார்னர் மற்றும் ஸ்மித் ஐபிஎல் போட்டிகளுக்கு முன் உடல்தகுதி பெற்றுவிடுவார்கள் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார் © AFP

காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் வலைபயிற்சிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், வார்னர் மற்றும் ஸ்மித் ஐபிஎல் போட்டிகளுக்கு முன் உடல்தகுதி பெற்றுவிடுவார்கள் என்று தெரிவித்தார். இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ள அணிகள் மோதும் ஆட்ட தினம் அன்று இவர்களின் தடைக்காலம் முடிவதால் அவர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார்கள் என்று கூறினார். மார்ச் 29 நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

பங்களாதேஷ் ப்ரீமியர் போட்டிகளின் போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்மித் தொடரிலிருந்து விலகினார். காயத்திலிருந்து மீண்டு முதல் ஷாட்டை ஆடுகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஓராண்டு தடைபெற்ற இருவரின் தடைக்காலம் மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மீண்டும் அணித்தேர்வுக்கு பரிந்துரைகப்படுவார்கள் என்று கூறப்படுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Great to have my first hit back today. The elbow is feeling good!

A post shared by Steve Smith (@steve_smith49) on

வார்னரும் காயம் காரணமாக பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் இருந்து வெளியேறினார். சிட்னியில் தங்கியிருக்கும் மார்னே மார்கல் ஸ்மித்தின் நெருங்கிய நண்பர். கேப்டவுனில் பந்தை சேதப்படுத்திய விஷயத்திற்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக அவர் அணிக்கு திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில், "நான் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்பிவிடுவார்கள். அடுத்த மாதம் யூஏஇயில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலகக் கோப்பைகான அணியிலும் அவர்கள் தங்களை நிரூபித்தி இடம்பெற வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார் லாங்கர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் போட்டிகளுக்கான முதல் இரண்டு வார அட்டவணை வெளியாகியுள்ளது
  • மார்ச் 29ம் தேதி ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன
  • பங்களாதேஷ் ப்ரீமியர் போட்டியில் ஸ்மித்துக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
"Sand paperஐ விட பேட் வலிமையானது" - ஸ்மித்தை பாராட்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
முதலாம் ஆண்டு திருமண நாளில் மனைவிக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ஸ்மித்!
முதலாம் ஆண்டு திருமண நாளில் மனைவிக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ஸ்மித்!
Advertisement