மலிங்காவை போல் பந்துவீசி வைரலான இலங்கை சிறுவன்!

Updated: 28 September 2019 13:19 IST

வைரலான வீடியோவில் இருந்தது ட்ரினிட்டி கல்லூரியை சேர்ந்த 17 வயது சிறுவன் மதீஷா பதிரனா என்பது தெரியவந்துள்ளது.

Sri Lanka Teenager Bowls Yorkers Like Lasith Malinga, Video Goes Viral.Watch
இலங்கையில் உள்ள இளம்வயது சிறுவன் ஒருவர், மலிங்காவை போலவே பந்துவீசி அசத்தி வருகிறார். © Twitter

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பத்தாண்டுக்கு மேலாக சிறப்பாக ஆடிய வீரர் மலிங்கா. அவரது அனல் பறக்கும் பந்துவீச்சில் உள்ள யார்க்கர்களுக்கு பல சர்வதேச பேட்ஸ்மேன்கள் நடுங்கினர். எனினும் தற்போது மலிங்கா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலுருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், இலங்கையில் உள்ள இளம்வயது சிறுவன் ஒருவர், மலிங்காவை போலவே பந்துவீசி அசத்தி வருகிறார். அவரது பந்துவீச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலான வீடியோவில் இருந்தது ட்ரினிட்டி கல்லூரியை சேர்ந்த 17 வயது சிறுவன் மதீஷா பதிரனா என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககாராவும் இதே பள்ளியில் படித்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் இடம்பெரிருந்த சிறுவன் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக டி20 போட்டியில் ஆடிய மலிங்கா 6 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அந்த தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த சாதனையை அவர் முதல்முறை ஒன்றும் செய்யவில்லை. ஏற்கெனவே 2007 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செய்திருந்தார்.

மலிங்காவை போல யார்க்கர் யாராலும் வீச முடியாது எனுமளவுக்கு பெயர்பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் மீண்டும் இடம்பெற்ற லசித் மலிங்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் மீண்டும் இடம்பெற்ற லசித் மலிங்கா!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
மலிங்காவை போல் பந்துவீசி வைரலான இலங்கை சிறுவன்!
மலிங்காவை போல் பந்துவீசி வைரலான இலங்கை சிறுவன்!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
'என் டைம் முடிஞ்சி போச்சு' - 15 ஆண்டுகால கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த மலிங்கா!
Advertisement