'அவர் குற்றம் செய்யவில்லை'' ஸ்ரீஷாந்தின் மனைவி பிசிசிஐக்கு உருக்கமான கடிதம்!

Updated: 28 November 2018 18:25 IST

35 வயதான ஸ்ரீஷாந்துக்கு டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் படி, பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்ததை தொடர்ந்தது. 

Sreesanth’s Wife Writes In Open Letter To Cricket Board Demanding Support And Justice
2013 ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தடை பெற்றார் ஸ்ரீஷாந்த்.  © AFP

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்தின் மனைவி புவனேஷ்வரி ஸ்ரீஷாந்த் பிசிசிஐக்கு ஒரு உருக்கமான‌ கடிதத்தை எழுதியுள்ளார். 2013 ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தடை பெற்றார் ஸ்ரீஷாந்த். 

கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை. அவர் மீது தவறான புகார் கூறப்பட்டுள்ளது. அதற்கு அவர் மீது வாழ்நாள் தடை விதித்திருப்பது முறையற்றது என்று தெரிவித்துள்ளார்.

35 வயதான ஸ்ரீஷாந்துக்கு டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் படி, பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்ததை தொடர்ந்தது. 

தற்போது பிப்பாஸ் சீஸன் 12ல் பங்கேற்பாளராக இருக்கும் ஸ்ரீஷாந்த் அந்த ஷோவில் தனது சக போட்டியாளர்களிடம் மேட்ச் பிக்சிங் புகார் பற்றி பேசிக் கொண்டிருந்துள்ளார். அதில் 10 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு பேட்ச் பிக்ஸிங் செய்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

b5midgho

Photo Credit: Twitter

முன்னதாக ஸ்ரீஷாந்த் செய்த மேல்முறையீடு கேரள நீதிமன்றத்தின் தடை உத்தரவு செல்லும் என்று அறிவித்தது. பின்பு நீதிமன்றம் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் ஆடலாம் என்று தடையை மாற்றி வழங்கியது.

அஜித் சண்டிலா மற்றும் அன்கித் சவான் ஆகியோர் மீது 2013ம் ஆண்டு மேட்ச் பிக்சிங் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கொஞ்ச நாளில் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!
"என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை" - திகார் நாட்கள் குறித்து ஶ்ரீசாந்த்!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன் ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
Advertisement