வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?

Updated: 16 July 2019 15:53 IST

உலகக்கோப்பையில் கையில் அடிப்பட்ட ஷிகர் தவான் உலல்தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை.

Selectors To Pick Squad For West Indies Tour On July 19, No Clarity On MS Dhoni
மிக பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த அணியில் இருப்பாரா மாட்டாரா என்பது தான் © AFP

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டிஸ் பயணம் செய்து விளையாட உள்ளது இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணி. இதற்கான அணி ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

மிக பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த அணியில் இருப்பாரா மாட்டாரா என்பது தான். நியூசிலாந்து அணியுடன் இந்தியா தோல்வி அடைந்த பின் தோனி ஓய்வு பெற்று விடுவார் என பல தரப்பட்ட வதந்திகள் பரவின.

இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான அணி ஜூலை 19 ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது. ‘தேர்வாளர்கள் மும்பையில் வரும் ஜூலை 19 ஆம் தேதி சந்திக்கவுள்ளனர். இதுவரை எங்களுக்கு தோனியிடம் இருந்து எந்த தகவலையும் வரவில்லை. என்னை கேட்டால் உலகக்கோப்பையில் தோனி சிறப்பாகவே விளையாடினார். அவர் தொடர வேண்டுமா இல்லையா என்பது அவரே முடிவு செய்ய வேண்டும்' என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ யிடம் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டிஸ் தொடரின் ஓடிஐ, டி20 போட்டிகளில் கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கீழ் வரும்.

உலகக்கோப்பையில் கையில் அடிப்பட்ட ஷிகர் தவான் உடல்தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை.

சுனில் கவாஸ்கர் உட்பட பலர் பிசிசிஐயை விமர்சித்துள்ளனர். அவர்கள் தோனி, ஷிகர் தவான் உட்பட சீனியர் வீரர்கள் உலகக்கோப்பைக்கு முன்பு  ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என பிசிசிஐ யிடம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூலை 19 ஆம் தேதி நடக்கும் மீட்டிங்கில் இவற்றை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான அணி ஜூலை 19 ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது
  • ஒடிஐ, டி20 போட்டிகளில் கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம்
  • ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
Advertisement