புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து

Updated: 27 February 2019 10:36 IST

இந்தியா ராணுவமல்லாத, திட்டமிடப்பட்ட வான்வழி தாக்குதலை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தியுள்ளது. இது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

Indian Air Force: Indian Sports Stars React After Air Strike On Terror Camp In Balakot
இந்தியா, ஜெய்ஷ் இ முகமதின் மிகப்பெரிய கூடாரத்தை தாக்கி அழித்துள்ளது. © AFP

இந்தியா ராணுவமல்லாத, திட்டமிடப்பட்ட வான்வழி தாக்குதலை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தியுள்ளது. இது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போர் விமானதாக்குதலில் 1000 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.. இதற்கு இந்திய விமானப்படையை கம்பீர், டெண்டுல்கர், மகேஷ் பூபதி, சாய்னா உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்த தாக்குதலை "பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமாவில் தாக்குதலுக்கு இந்தியா தந்திருக்கும் பதிலடி" என்று பலரும் கூறியுள்ளனர்.

இந்தியா, ஜெய்ஷ் இ முகமதின் மிகப்பெரிய கூடாரத்தை தாக்கி அழித்துள்ளது. இதிலிருந்து அதிக அளவிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டிருந்த மற்றொரு தீவிரவாத தாக்குதல் குறித்து தகவல் கிடைத்து அதனை அழித்தது இந்திய விமானப்படை. இது தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

நம்பகத்தகுந்த தகவல்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் திட்டத்தை விளக்கின என்று வெளியுறவு துறை செயளர் தெரிவித்தார்.

ஞாயிறன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது, விசாகப்பட்டிண மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் புல்வாமா தாக்குதாலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக  இரண்டு நிமிட அமைதிகாக்குமாறு இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார்.  இரு நாட்டு வீரர்களும் தேசிய கீதம் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சில பகுதிகளில் மக்கள் சத்தம் அதிகமாக இருந்தது. கோலி கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்றது மைதானம் அமைதியானது.

இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடினர். 

மேலும், போட்டிக்கு முன்பாக கோலி அளித்த பேட்டியில் "பாகிஸ்தானுடனான உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு துணை நிற்போம்" என்று தெரிவித்தார்.

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கு பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் ஆடக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, சேத்தன் சவ்கான், ஹர்பஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா, வான்வழி தாக்குதலை -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தியுள்ளது
  • "இந்த தாக்குதல் இந்தியா பகிஸ்தானுக்கு தந்திருக்கும் பதிலடி"
  • இந்தியா, ஜெய்ஷ் இ முகமதின் மிகப்பெரிய கூடாரத்தை தாக்கி அழித்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்
"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்
கேரள ரசிகருடனான சிறப்பான நேரம் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்!
கேரள ரசிகருடனான சிறப்பான நேரம் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்!
"நம்பமுடியாத மறுபிரவேசம்" - ஸ்மித்தின் இரட்டை சதத்தை பாராட்டிய டெண்டுல்கர்!
"நம்பமுடியாத மறுபிரவேசம்" - ஸ்மித்தின் இரட்டை சதத்தை பாராட்டிய டெண்டுல்கர்!
"அவர் கற்றுக்கொடுத்த பாடம் வாழ்க்கையிலும் தொடர்கிறது" - பயிற்சியாளர் குறித்து சச்சின்!
"அவர் கற்றுக்கொடுத்த பாடம் வாழ்க்கையிலும் தொடர்கிறது" - பயிற்சியாளர் குறித்து சச்சின்!
"பென் ஸ்டோக்ஸ் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்" - சச்சின் ரசிகர்களை சீண்டிய ஐசிசி!
"பென் ஸ்டோக்ஸ் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்" - சச்சின் ரசிகர்களை சீண்டிய ஐசிசி!
Advertisement