இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் கவனிக்கத்தக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: 05 June 2019 09:53 IST

2019 உலகக் கோப்பையில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் அவர்தான். போட்டிகளின் முடிவை மாற்றுவதில் பும்ரா பெரும் பங்கு வகிப்பார்.

South Africa vs India: Jasprit Bumrah, India Bowler To Watch Out For
பும்ரா 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிட்னியில் அறிமுகமானார். © AFP

பந்துவீசும் முறையிலும், கைகளை விரித்து வீசுவதிலும் பும்ரா மற்ற சர்வதேச பந்துவீச்சாளர்களிடமிருந்து மாறுபட்டவர். அதனால், ஒருநாள் போட்டிகளின் தவிர்க்க முடியாத வீரராகியுள்ளார் பும்ரா. அவரால் ஆரம்பத்திலும், இறுதியிலும், பார்டனர்ஷிப்களை உடைக்கும் போது சிறந்த பந்துகளை வீச முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணி நம்புகிறது. 2019 உலகக் கோப்பையில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் அவர்தான். போட்டிகளின் முடிவை மாற்றுவதில் பும்ரா பெரும் பங்கு வகிப்பார்.

பும்ரா 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிட்னியில் அறிமுகமானார். ஆஸ்திரேலியா அந்த போட்டியில் 330 ரன்கள் குவித்த போதும், பும்ரா 10 ஓவர்கள் வீசி 40 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பும்ரா 49 போட்டிகளில் ஆடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி 4.51 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 29.4.

அவர் 4 முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/27

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை முதல் போட்டியில் தென்னாப்பிக்காவை சந்திக்கிறது இந்தியா
  • பும்ரா 49 போட்டிகளில் ஆடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
  • போட்டிகளின் முடிவை மாற்றுவதில் பும்ரா பெரும் பங்கு வகிப்பவர்
தொடர்புடைய கட்டுரைகள்
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?
"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!
"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
Advertisement