இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்: அணியில் யார் உள்ளே.. யார் வெளியே?

Updated: 14 August 2019 16:36 IST

டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனகாக பாப் டு பிளெசிஸும், துணைக் கேப்டனாக தெம்பா பவுமாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

South Africa Name Squads For India Tour, Quinton De Kock To Lead T20I Squad
செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் டி20 போட்டிக்கு கேப்டனாக குவின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். © AFP

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் டி20 போட்டிக்கு கேப்டனாக குவின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஸ்ஸி வன் தெர் தஸன் துணைக் கேப்டனாக இருப்பார். டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனகாக பாப் டு பிளெசிஸும், துணைக் கேப்டனாக தெம்பா பவுமாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு இதுவரை களமிறங்காத வேகப்பந்து வீச்சாள ஆன்ரிச் நார்ட்ஜே, சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ருடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் படி, "ஐடன் மார்க்ராம், தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்ஜிடி ஆகியோ டி20 அணியில் இடம்பெறவில்லை. ஏனெனில், இந்திய ஏ அணியுடன் 4 நாள் போட்டிகான பயிற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டியுள்ளது".

"டெஸ்ட் அணியில் புதிதாக வந்த மூன்று பேரும் கடந்த சீசனின் நான்கு நாள் போட்டியில் அற்புதமான விளையாட்டின் மூலம் தங்கள் இடத்தை எட்டியுள்ளனர்" கொர்ரி வான் ஸைல் கூறினார்.

செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 23 வரை தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறும்.

அணி விவரம்: 

டெஸ்ட் போட்டிக்கான அணி: பாப் பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), தெம்பா பவுமா (துணைக் கேப்டன்), தியூனிஸ் டி ப்ரூயின், குயின்டன் டி கோக், டீன் எல்கர், ஜுபைர் ஹம்ஸா, கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், செனுரன் முத்துசாமி, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெர்னான் பிலாண்டர், டேன் பீடிட், ககிசோ ரபாடா, ருடி செகன்ட்.

டி20 அணி: குவின்டன் டி காக் (கேப்டன்), ரஸ்ஸி வன் தெர் தஸன் (துணைக் கேப்டன்), தெம்பா பவுமா, ஜூனியர் தாலா, ஜார்ன் ஃபார்டியூன், பியூரான் ஹென்றிக்ஸ், ரீஸா ஹென்றிக்ஸ், டேவி மில்லர், ஆன்ரிச் நார்ட்ஜே, ஆண்டில் பெலுக்வயோ, ககிசோ ரபாடா, டுவைன் பிரிட்டோரியஸ், தப்ரைஸ் ஷம்ஸி, ஜான்-ஜான் ஸ்மட்ஸ்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது டி காக்கின் காலில் விழுந்த ரசிகர்!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது டி காக்கின் காலில் விழுந்த ரசிகர்!
Advertisement