"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!

Updated: 06 August 2019 13:34 IST

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

Dale Steyn Announces Retirement From Test Cricket
36 வயதான இவர் 93 போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்காக ஆடி, 22.95 சராசரியுடன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். © Twitter

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சிவப்பு பந்து போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார் ஸ்டெயின். 36 வயதான இவர் 93 போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்காக ஆடி, 22.95 சராசரியுடன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தன்னுடைய ஓய்வு முடிவை உறுதி செய்யும் விதமாக ஸ்டெயின் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ட்விட் செய்தது. "மீண்டும் ஒருபோதும் மற்றொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று கருதுவது கடினமாக உள்ளாது, ஆனால் இதைவிட பயங்கரமான விஷயம் என்னவென்றால், மீண்டும் ஒருபோதும் விளையாடக்கூடாது என்ற எண்ணம். அதனால், நான் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் கவனம் செலுத்தி, என்னால் சாத்தியமானவற்றை கிரிக்கெட்டுக்காக செய்வேன்" என்றார்.

"நான் அதிகம் விரும்பும் போட்டியான டெஸ்ட்டிலிருந்து நான் விடைபெறுகிறேன்," என்றார் 36 வயதான ஸ்டெயின், நியூசிலாந்து அணியின் முன்னணி விக்கெட் டேக்கர் மற்றும் டாப் 10 முன்னணியில் இருப்பவர்.

"என்னுடைய கருத்து படி, கிரிக்கெட்டில் சிறந்தது டெஸ்ட் போட்டிகள் தான். அது தான் உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சோதிக்கிறது. மீண்டும் ஒருபோதும் மற்றொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று கருதுவது கடினமாக உள்ளாது, ஆனால் இதைவிட பயங்கரமான விஷயம் என்னவென்றால், மீண்டும் ஒருபோதும் விளையாடக்கூடாது என்ற எண்ணம்" 

"அதனால், நான் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் கவனம் செலுத்தி, என்னால் சாத்தியமானவற்றை கிரிக்கெட்டுக்காக செய்வேன். குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் நான் கவனம் செலுத்தி விளையாடுவேன்" என்றார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகி தபாங் மோரே ஸ்டெயின் குறித்து, "சந்தேகத்திற்கு இடமின்றி கிரிக்கெட்டின் எல்லா நேரத்திலும் சிறந்து விளங்கக்கூடிய ஒருவர்." என்றார்.

"உலகக் கிரிக்கெட்டில் தனித்து நிற்கக் கூடியவர். தான் சிறப்பாக ஆடியதோடு, அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்," வருத்தத்துடன் மோரே கூறினார்.

"எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எங்கள் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு அற்புதமான வழிகாட்டியாக இருந்துள்ளார்."

அதிகபடியான காயங்கள் காரணமாக ஃபீல்ட்டை விட வெளியில் அதிக நேரம் செலவழித்தார் ஸ்டெயின்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயணம் காரணமாக அவர் 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்காக ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை.

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஸ்டெயின், ஐபில் போட்டிகளில் ஆடி வந்தார். ஆனால், காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை. காயம் குணமடையாத காரணத்தினால், அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்.

ஸ்டெயின் கடைசியாக பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். 2019-20 தொடருக்கான வெள்ளை பந்து போட்டியின் ஒப்பந்தத்தில் உள்ளார். இதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறுவார் ஸ்டெயின்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகல்!
தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகல்!
Advertisement