“My Super Star”- யுவராஜுக்கு Ganguly கொடுத்த அல்டிமேட் ரிப்ளை!

Updated: 21 October 2019 09:57 IST

வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ளார் Sourav Ganguly

Sourav Ganguly Wins Hearts With Brilliant Reply To Yuvraj Singh
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) இன்னும் சில நாட்களில் பிசிசிஐ-யின் (BCCI) தலைவராக பொறுப்பேற்க உள்ளார். © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) இன்னும் சில நாட்களில் பிசிசிஐ-யின் (BCCI) தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் (Yuvraj Singh). அதற்கு கங்குலி கொடுத்துள்ள பதில் இணைய வைரலாக மாறியுள்ளது. 

வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ள கங்குலிக்கு யுவராஜ், “பெரிய மனிதருக்கு பெரிய பயணம்! இந்திய கேப்டனிலிருந்து பிசிசிஐ தலைவர். ஒரு நிர்வாகியாக கிரிக்கெட் வீரர் இருக்க உள்ளது சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நிர்வாகம் என்பது ஒரு கிரிக்கெட் வீரர் பார்வையிலிருந்து எப்படி இருக்கும் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். யோயோ முறை அமலில் இருந்தபோது நீங்கள் தலைவராக இருந்திருக்கலாம். குட் லக் தாதா சவுரவ் கங்குலி,” என்று ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். 

அதற்கு கங்குலி, “பெஸ்ட் வீரருக்கு நன்றி. இந்தியாவுக்கு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்தவர் நீங்கள். தற்போது கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டிய நேரம். நீங்கள்தான் எனது சூப்பர் ஸ்டார். எப்போதும் கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கட்டும்” என்று ரிப்ளை செய்தார். 

பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கங்குலி செய்தியாளர்களை சந்தித்து, “அடுத்த சில மாதங்களில் அனைத்து விஷயங்களில் இருக்கும் பிரச்னைகளையும் சரி செய்து, கிரிக்கெட்டில் ஒரு சகஜ நிலையைக் கொண்டு வர முயல்வோம்,” என்று உறுதிபட கூறினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • Sourav Ganguly, BCCI தலைவராக பொறுப்பேற்க உள்ளார்
  • Yuvraj, ட்விட்டர் மூலம் கங்குலிக்குப் பாராட்டு தெரிவித்தார்
  • Sourav Ganguly, வரும் 23 ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"கடினமான சூழலில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி" - சவுரவ் கங்குலி!
"கடினமான சூழலில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
India vs Bangladesh: "முதல் டி20 போட்டி டெல்லியில் தான் நடக்கும்" - கங்குலி
India vs Bangladesh: "முதல் டி20 போட்டி டெல்லியில் தான் நடக்கும்" - கங்குலி
Advertisement