47 வயதில் தாதா - இணையத்தில் குவிந்த வாழ்த்துகள்!

Updated: 09 July 2019 10:31 IST

2003 உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற கேப்டன் கங்குலி.

Happy Birthday Sourav Ganguly: "Dada" Turns 47, Wishes Pour In
இந்திய அணியின் பாதையை வெற்றிக்கு திருப்பியவர் கங்குலி. © Twitter

இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டர் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்திருந்தனர். இந்திய அணியின் பாதையை வெற்றிக்கு திருப்பியவர் கங்குலி. 2003 உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற கேப்டன்.  லார்ட்ஸ் பால்கனியில் அவர் சட்டையை கழற்றி சுழற்றிய நிகழ்வு வரலாற்று நிகழ்வாக பதிவானது. 

கங்குலி 113 டெஸ்ட்களில் ஆடி 7212 ரன்களை 42.17 சராசரியுடன் குவித்தார். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11363 ரன்களை குவித்துள்ளார். அவர் இந்திய அணியின் அதிக ரன் குவித்த மூன்றாவது வீரராக உள்ளார்.

முன்னாள் வீரர்கள் லட்சுமணன், யுவராஜ் உள்ளிட்டோர் கங்குலிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தனது பிறந்த நாளில் புதிய விஷயத்தை துவங்குகிறேன் என்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கி அதில் பதிவிட்டார்.

கங்குலி தற்போது இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“நான் தவறாக கூறவில்லை...” - மீண்டும் டெண்டுல்கரை கிண்டல் செய்த கங்குலி!
“நான் தவறாக கூறவில்லை...” - மீண்டும் டெண்டுல்கரை கிண்டல் செய்த கங்குலி!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
Advertisement