இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட்டுக்கு பிரதமர்கள் ஒப்புதல் வேண்டும் - கங்குலி!

Updated: 18 October 2019 10:32 IST

பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு உறவுகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசினார்.

Sourav Ganguly Speaks On India-Pakistan Bilateral Cricket
2004ம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் கங்குலி இந்தியாவை வழிநடத்தியுள்ளார். © AFP

பிசிசிஐ தலைவராகவிருக்கும் சவுரவ் கங்குலி, அக்டோபர் 23 அன்று அவர் பொறுப்பேற்பதற்கு முன்பு சில திட்டங்கள் தயாராக உள்ளன. பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு உறவுகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசினார், இந்த யோசனைக்கு இரு நாடுகளின் பிரதமரின் ஒப்புதல் தேவை என்றார். "அந்த கேள்வியை நீங்கள் மோடி ஜி மற்றும் பாகிஸ்தான் பிரதமரிடம் கேட்க வேண்டும்," என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சவுரவ் கங்குலி கூறினார். "நிச்சயமாக எங்களிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஏனென்றால் சர்வதேச சுற்றுப்பயணங்கள் அனைத்தும் அரசாங்கங்கள் மூலமாகவே உள்ளன. எனவே அந்த கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

இரு நாடுகளும் கடைசியாக 2012ம் ஆண்டில் இருதரப்பு தொடரில் இடம்பெற்றன. பாகிஸ்தானுடன் இரண்டு டி20 சர்வதேச மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரை இந்தியா நடத்தியது.

2004ம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் கங்குலி இந்தியாவை வழிநடத்தியுள்ளார். கார்கில் போருக்குப் பின்னர் முதல் இருதரப்பு தொடர் 1999ம் ஆண்டும், இந்தியாவின் முதல் பாகிஸ்தான் பயணம் 1989ம் ஆண்டும் நடந்தது.

பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பிசிசிஐ, ஐசிசி யிடம் "பயங்கரவாதம் வெளிப்படும் நாடுகளுடன் உறவுகளைத் துண்டிக்குமாறு" பாகிஸ்தானைக் குறிப்பது போல் கேட்டுக் கொண்டது.

புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை வாரியத்தின் விவகாரங்களை மேற்பார்வையிடும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகிகள் குழுவின் (CoA) உத்தரவின் பேரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.

உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தானை புறக்கணிக்குமாறு ஐ.சி.சி யைக் கோரியது சிஓஏ.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"கடினமான சூழலில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி" - சவுரவ் கங்குலி!
"கடினமான சூழலில் விளையாடிய இரு அணிகளுக்கும் நன்றி" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
India vs Bangladesh: "முதல் டி20 போட்டி டெல்லியில் தான் நடக்கும்" - கங்குலி
India vs Bangladesh: "முதல் டி20 போட்டி டெல்லியில் தான் நடக்கும்" - கங்குலி
Advertisement