"இந்திய அணியை போலவே பிசிசிஐயையும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன்" - கங்குலி

Updated: 23 October 2019 19:31 IST

சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி மிகவும் முக்கியமானவர் என்றும் அவருக்கு எல்லா விதத்திலும் ஆதரவு அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

BCCI President Sourav Ganguly Says "Virat Kohli Most Important Man In Indian Cricket, Will Support Him"
கங்குலி 39வது பிசிசிஐ தலைவராக ஒன்பது மாத காலத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். © AFP

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பிறகு சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி மிகவும் முக்கியமானவர் என்றும் அவருக்கு எல்லா விதத்திலும் ஆதரவு அளிப்பேன் என்றும் கூறியுள்ளார். "நான் நாளை விராட் கோலியுடன் பேசுவேன், அவருக்கு என்ன வேண்டுமானாலும் ஆதரிப்பேன்" என்று சவுரவ் கங்குலி புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். விராட் கோலியின் தலைமையின் கீழ், இந்தியா சமீபத்தில் தொடர்ச்சியாக 11 வது டெஸ்ட் தொடர் வெற்றியை உள்நாட்டில் பதிவு செய்தது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது இந்தியா.

"கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் அவர்கள் விளையாடிய விதத்தில் நேர்மையாக இருக்கும் ஒரு சிறந்த அணியாகும்" என்று கூறினார்.

முன்னதாக வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக செயல்பட்ட 47 வயதான கங்குலி, டீம் இந்தியாவை வழிநடத்தியதைப் போலவே இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் வழிநடத்த உள்ளதாக கூறினார்.

" நம்பகத்தன்மை, ஊழல் இல்லாதது மற்றும் நான் இந்தியாவை வழிநடத்தியது போலவே பிசிசிஐயையும் வழிநடத்துவேன். அதில் எந்த சமரசம் இல்லை" என்று அவர் கூறினார்.

விஜயநகரம் மகாராஜாவுக்குப் பிறகு இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி.

முன்னாள் இந்திய கேப்டன், பிசிசிஐ முன்னாள் தலைவர்களான ஜக்மோகன் டால்மியா மற்றும் என் சீனிவாசன் ஆகியோரின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, கங்குலி கேப்டன் பதவியில் இருந்தபோது அவர்கள் எவ்வாறு ஆதரித்தனர் என்பதை விளக்கினார்.

"கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே எங்கள் கவனம். நான் கேப்டனாகவும், ஜக்மோகன் டால்மியா தலைவராகவும் இருந்தபோது, ​​நாங்கள் ஏதாவது கேட்டு, எப்போதாவது மறுக்கப்பட்டதா என்பது எனக்கு நினைவில் இல்லை"

"விராட் இப்போது கேப்டனாக இருக்கிறார், எங்களுக்கும் அதே உறவுகள் இருக்கும். இந்தியா சிறப்பாக விளையாட அவருக்கு என்ன தேவைப்பட்டாலும், நாங்கள் அதை அவருக்கு வழங்குவோம். கோலி இந்திய அணியை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். நாங்கள் அவருடன் இருந்தோம், நாங்கள் அவருடன் இருப்போம்," கங்குலி கூறினார்.

கங்குலி 39வது பிசிசிஐ தலைவராக ஒன்பது மாத காலத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
Advertisement