"சுப்மன் கில், ரஹானே ஏன் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை" - கேள்வி எழுப்பும் கங்குலி!

Updated: 24 July 2019 11:45 IST

ஏன் ஒரு சில வீரர்கள் மட்டும் தான் அனைத்து விதமான போட்டியிலும் இடம்பெற்றுள்ளார்கள் என்று தேர்வுக்குழுவினரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் கங்குலி.

Sourav Ganguly Questions Shubman Gill And Ajinkya Rahane
இந்திய ஏ அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு நடந்த தொடரில் சுப்மன் கில் 218 ரன் குவித்து அசத்தினார். © AFP

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் அஜின்க்யா ரஹானே இருவரும் மூன்று ஒருநாள் போட்டியில் இணைக்கப்படாதது ஆச்சரியமாக இருகிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஏன் ஒரு சில வீரர்கள் மட்டும் தான் அனைத்து விதமான போட்டியிலும் இடம்பெற்றுள்ளார்கள் என்று தேர்வுக்குழுவினரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் கங்குலி. " தேர்வுக்குழுவினர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அதே வீரர்களை தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது. இதனால் வீரர்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.. வெறும் சிலரே அனைத்து விதமாக போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார்கள்.. பெரிய அணிகளில் எப்போதும் நிலையான வீரர்கள் இருந்தனர்.. எல்லோரையும் மகிழ்விக்க வேண்டிய தேவையில்லை. நாட்டுக்காக விளையாட நிலையான வீரர்களை தேர்வு செய்வது அவசியம்..@bcci," என்று கங்குலி ட்விட் செய்தார்.

"அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் பலர் அனைத்து விதமாக கிரிக்கெட்டிலும் ஆடக்கூடயவர்கள்.. ரஹானே ஒருநாள் போட்டியில் இல்லாதது.. சுப்மன் கில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது.. " என்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கவிருக்கும் அனைத்து தொடர்களுக்குமான  (T20Is, ODIs and Tests) அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்திய ஏ அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு நடந்த தொடரில் சுப்மன் கில் 218 ரன் குவித்து அசத்தினார். ஆனால், இந்த அணியில் அவர் இடம் பெறாதது பெறும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவிருக்கும் தொடருக்கு விராட் கோலி தான் கேப்டன். தோனி இரண்டு மாதங்கள் ஓய்வு கேட்டு விலகியதால், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3 டி20 போட்டிக்காக இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கே எல் ராகுல், சி புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ்

Comments
ஹைலைட்ஸ்
  • "சுப்மன் கில் ஒருநாள் போட்டியில் இணைக்கப்படாதது ஆச்சரியமாக இருகிறது"
  • அணியில் சுப்மன் கில் இடம் பெறாதது பெறும் கேள்வியை எழுப்பியுள்ளது
  • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அனைத்து போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்
தொடர்புடைய கட்டுரைகள்
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்
"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்
Advertisement