பிசிசிஐ-யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி!

Updated: 23 October 2019 19:16 IST

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் பதவியேற்றுள்ளனர்.

Sourav Ganguly Takes Over As BCCI President
பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டார். © Twitter

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் பதவியேற்றுள்ளனர். துமால், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் ஆவார். 
 
பிசிசிஐ-யின் மேற்கொண்ட அனைத்து பதவிகளுக்கும் வேறு வேட்பாளர்கள் யாரும் எதிர்த்து போட்டியிடாததால், தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

விஜயநகரம் மகாராஜாவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முதல் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனினும், கங்குலியால பிசிசிஐ தலைவராக 2020 செப்டம்பர் வரை மட்டுமே பணியாற்ற முடியும், ஏனெனில் அவர் தற்போது வங்க கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக உள்ளார். மேலும், கட்டாயமாக அவர் குளிர் காலத்திற்குள் செல்ல வேண்டியிருக்கும். 

கங்குலியின் நிர்வாக வழிகாட்டியான ஜகன்மோகன் டால்மியாவின் மரணத்தைத் தொடர்ந்து, 2015ல் (CAB) தலைவராக பொறுப்பேற்றார்.

47 வயதாகும் கங்குலி, டால்மியாவின் வெற்றியை முன்மாதிரியாக கொண்டு செயல்பட விரும்புவதாக கூறியிருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"தொடரில் ஒரு பிங்க் பந்து டெஸ்ட்டாவது நடத்தபட வேண்டும்" - சவுரவ் கங்குலி
"தொடரில் ஒரு பிங்க் பந்து டெஸ்ட்டாவது நடத்தபட வேண்டும்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
மகளுடன் வேடிக்கையான உரையாடலில் ஈடுபட்ட சவுரவ் கங்குலி!
மகளுடன் வேடிக்கையான உரையாடலில் ஈடுபட்ட சவுரவ் கங்குலி!
"வலிமையான நபர்கள் தேவை" - தேர்வுக்குழுவினரை சாடிய ஹர்பஜன் சிங்!
"வலிமையான நபர்கள் தேவை" - தேர்வுக்குழுவினரை சாடிய ஹர்பஜன் சிங்!
Advertisement