Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்கவுள்ளார் கங்குலி!

Updated: 26 March 2020 13:06 IST

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ரூ .50 லட்சம் மதிப்புள்ள அரிசியை ஏழை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.

Sourav Ganguly Donates Rice Worth Rs 50 Lakh Amid Coronavirus Lockdown
கொரோனா வைரஸால் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. © AFP

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ரூ .50 லட்சம் மதிப்புள்ள அரிசியை ஏழை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார். வங்காள கிரிக்கெட் சங்கம் (சிஏபி) தனது அறிக்கையில், லால் பாபா ரைஸுடன் கங்குலியும்  இணைந்து பாதுகாப்புக்காக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “லால் பாபா ரைஸுடன் சவுரவ் கங்குலி இணைந்து, பாதுகாப்புக்காக அரசு பள்ளிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க முன்வந்துள்ளார். கங்குலியின் இந்த முயற்சி, மாநிலத்தின் பிற குடிமக்களை நமது மாநில மக்களுக்குச் சேவை செய்ய இதேபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்,” எனு சிஏபி ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

சிஏபி தலைவர் அவிஷேக் டால்மியா அவர் அரசின் அவசர நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கியுள்ளார். இந்த பணம் ஏழை மக்களுக்கு உதவும் என்று கூறியுள்ளார்.

“கோவிட்-19க்கு எதிராகப் போராட அரசாங்கத்தின் அவசர நிவாரண நிதிக்கு சிஏபி தலைவர் 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கிறார்” என்று சிஏபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 21 நாள் நாடு தழுவியதாக ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரூ .50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்கவுள்ளதாக கங்குலி உறுதியளித்தார்
  • CAB தலைவர் அவிஷேக் டால்மியாவும் ஏழை மக்களுக்கு ஆதரவளித்துள்ளார்
  • பிரதமர் மோடி 21 நாட்கள் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்கவுள்ளார் கங்குலி!
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்கவுள்ளார் கங்குலி!
“என் நகரத்தை இப்படிப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” - சவுரவ் கங்குலி!
“என் நகரத்தை இப்படிப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” - சவுரவ் கங்குலி!
“கடைசியாக எனக்கு எப்போது ஓய்வுநாள் கிடைத்தது என்பது கூட நினைவில் இல்லை” - கங்குலி!
“கடைசியாக எனக்கு எப்போது ஓய்வுநாள் கிடைத்தது என்பது கூட நினைவில் இல்லை” - கங்குலி!
“கொரோனா வைரஸால் ஐபிஎல் தொடருக்கு எந்த பாதிப்பும் இல்லை” - சவுரவ் கங்குலி!
“கொரோனா வைரஸால் ஐபிஎல் தொடருக்கு எந்த பாதிப்பும் இல்லை” - சவுரவ் கங்குலி!
Advertisement