டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஷஸ் உயிர்கொடுக்கிறது - கங்குலி

Updated: 20 August 2019 16:56 IST

ஷஸ் டெஸ்ட் போட்டிகளை உயிரோடத்துடன் வைத்திருக்க உதவுவதாக கூறியுள்ளார். மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது.

Sourav Ganguly Says Ashes Has "Kept Test Cricket Alive"
மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது. © AFP

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆஷஸ் தொடரை பாராட்டியுள்ளார். ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளை உயிரோடத்துடன் வைத்திருக்க உதவுவதாக கூறியுள்ளார். மழையால் குறிக்கிட்டுக்குள்ளான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது. ஆர்ச்சரின் அபாரமான பந்துவீச்சு, ஸ்மித்துக்கு அவர் வீசிய பவுன்ஸர் என போட்டியை சுவாரஸ்யமாக்கிய பல விஷயங்களை கூறி ஆஷஸை பாராட்டினார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் போட்டியை போல டெஸ்ட்டில் மற்ற அணிகளும் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென ட்விட் செய்திருந்தார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்த ட்விட்டுக்கு அளித்துள்ள பதிலில் '' அணிகள் வலிமையாக இருந்தால் மட்டுமே தரம் உயரும், அப்படி பார்த்தால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தில் நியூசிலாந்து ஆடும் போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் வலிமையான அணிகள் மோதும் போட்டிகளாக இல்லை என்றார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை  அணிகள் துவங்கிவிட்டன. தற்போது புள்ளிப்பட்டியலில் இலங்கை 60 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 32 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 

இந்தியா ஆகஸ்ட் 22ம் தேதி மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் போட்டியிலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை துவங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
Advertisement