பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!

Updated: 31 October 2019 10:42 IST

சவுரவ் கங்குலி தனது முன்னாள் இந்திய அணியின் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட்டை சின்னசாமி மைதானத்தில் சந்திக்க பெங்களூரு சென்றிருந்தார். 

Sourav Ganguly Airport Selfie With Fans Wins The Internet
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக நியமிக்கப்பட்டார் சவுரவ் கங்குலி © Twitter

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சவுரவ் கங்குலி புதன்கிழமை பெங்களூரு விமான நிலையத்தில் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களை மகிழ்வித்தார். "பெங்களூரு விமான நிலையத்தில் உள்ளே செல்லும் இடத்தில் .. மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு உங்களை மிகவும் நன்றியடையச் செய்கிறது" என்று சவுரவ் கங்குலி ட்விட் செய்துள்ளார். விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் பலருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார். சவுரவ் கங்குலி தனது முன்னாள் இந்திய அணியின் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட்டை சின்னசாமி மைதானத்தில் சந்திக்க பெங்களூரு சென்றிருந்தார். 

47 வயதான முன்னாள் இந்திய கேப்டன் ட்விட்டரில் ரசிகர்கள் மனதைக் கவரும் பதிவை பகிர்ந்தார்.

கங்குலி, என்சிஏ அதிகாரிகளுடன், பெங்களூரில் புதிய என்சிஏ கட்டடம் கட்டுவதற்கான நிலத்தையும் பார்வையிட்டார்.

இங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே சிறப்பான மையத்தை அமைப்பதற்காக கர்நாடக அரசிடமிருந்து கூடுதலாக 15 ஏக்கர் நிலம் கிரிக்கெட் நிர்வாகக் குழுவுக்கு கிடைத்துள்ளது.

பிசிசிஐ மாநில அரசாங்கத்துடன் 25 ஏக்கர் ஒப்பந்தத்தை மே மாதம் முடித்திருந்தது. இந்த வசதியின் மொத்த பரப்பளவு இப்போது 40 ஏக்கர்.

இப்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பிசிசிஐ அதிநவீன வசதிகளுடன் என்சிஏவை உருவாக்க மாற்று இடத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டிருந்தது.

என்சிஏக்காக ஒதுக்கப்பட்ட நிலம் தேவநஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு கல் எறியும் தூரத்தில் உள்ளது. உட்புற வலைகள், நிர்வாக கட்டிடங்கள் மற்றும் விடுதிகளைத் தவிர மூன்று மைதானங்களுக்கு இது போதுமானதாக இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்படுவதாக கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
"இருதரப்பு போட்டிகளை கங்குலி மீண்டும் தொடங்க முடியும்" - ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
கங்குலியின் நான்கு நாடுகளுக்கு போட்டி யோசனையை பாராட்டிய கிரிக்கெட் ஆஸி. சிஇஓ!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
என்சிஏ குறித்த விஷயங்களை விவாதித்த சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்!
Advertisement