''கோலியின் ஆக்ரோஷத்தை நான் ரசிக்கிறேன்''- ஆஸி கேப்டன் டிம் பெய்ன்!

Updated: 24 December 2018 13:45 IST

"எனக்கு விராட் ஆடுவது தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த விஷயம்" என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

India vs Australia: Tim Paine Loving Heated Exchanges With Team India Skipper Virat Kohli
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்பெர்னில் துவங்குகிறது. © AFP

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்பெர்னில் துவங்குகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் பேசும் போது ''விராட் கோலியுடனான இந்தச் சண்டைகளை நான் ரசிக்கிறேன். அதேசமயம் இது கடுமையாகவும், தனிமனித தாக்குதலாகவும் இல்லாத வண்ணம் தொடரும் என்று உறுதியளிக்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

இரண்டாவது டெஸ்ட்டின் இறுதியில் கோலி பெய்னை முகம் காட்டாமல் தவிர்த்து வெறுப்பாக கை கொடுத்து சென்றது சர்ச்சையானது. ஆனால் அதற்கும் பெய்ன் "கோலி தோல்வியை விரும்பாதவர் அதனால் மனவருத்தத்தில் அப்படி சென்றிருப்பார். மற்றபடி ஒன்றுமில்லை" என்றார்.

"விராட் ஒரு ப்ரோஃபஷனல் வீரர். அவருக்கு எப்போதுமே தோல்வி பிடிக்காது. எனக்கு விராட் ஆடுவது தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த விஷயம்" என்றார்.

விராட் கோலியின் கள ஆக்ரோஷத்தை பாலிவுட் நடிகர் நஸ்ரூதின் ஷா "கோலி ஒரு மோசமான வீரர்" என்று விமர்சித்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான்ஸன் "கோலி மரியாதைக்குறைவான செயல்களில் ஈடுபடுகிறார். போட்டி முடிந்ததும் பெய்னிடம் கைகுலுக்கக்கூட இல்லை" என்று சாடியுள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுடனான வாக்குவாதம் பற்றி இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் கூறும் போது "விராட்டின் கள ஆக்ரோஷம்தான் அவருக்கு வெற்றியை தருகிறது. நீங்கள் விராட்டை பற்றி பேசினால், அவரது போராட்ட குனத்தை பற்றி பேச வேண்டும். அதேபோல அவரது ஸ்லெட்ஜிங் பற்றி பேசினால் அவரது வெற்றிகள் பற்றியும் பேச வேண்டும்'' என்று கூறினார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட்டுக்கான அணியை தேர்ந்தெடுப்பதில் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் மிட்சல் மார்ஷ்  இருவரில் யாரை அணியில் சேர்ப்பது. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரில் யாரை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக லாங்கர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியை பொறுத்தமட்டில் ப்ரித்வி ஷா காயம் காரணமாக வெளியேறினார். ரோஹித், அஷ்வின் காயத்திலிருந்து மீண்டது, ஜடேஜா ஃபிட்டாக உள்ளது என யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இந்திய அணியிலும் உள்ளது. 

ராகுல், விஜயின் ஃபார்ம் மோசமாக இருப்பதால் கோலிக்கும், புஜாராவுக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க - "விராட் கோலியை ட்விட்டரில் விமர்சித்த ஆஸ்திரேலிய ஜர்னலிஸ்ட்!"

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்...
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
Advertisement