நியூசிலாந்து தொடரில் அசத்தல்... முதலிடத்தில் ஸ்மிருதி மந்தனா!

Updated: 03 February 2019 19:49 IST

இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்

Smriti Mandhana Tops ODI Batting Charts After Heroics vs New Zealand
2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. © ICC/Twitter

இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய பெண்கள் அணி ஆடியது. 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்றது. அந்த இரண்டு போட்டிகளிலும் 90 ரன்கள் அடித்து தொடரை வெல்ல காரணமாக இருந்தார் மந்தனா. 

இதனால் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரி மற்றும் லானிங்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். இந்திய கேப்டன் மிதாலி தாஜ் ஒரு இடம் சறுக்கி 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான ஃபார்முக்கு அவர் இந்த இடத்துக்கு தகுதியானவர் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறியுள்ளனர்.

2018லிருந்து 15 போட்டிகளில் ஆடியுள்ள மந்தனா 2 சதங்கள் மற்றும் 8 அரைசதங்களை அடித்துள்ளார்.

மந்தனாவுடன் துவக்க வீராங்கனையாக களமிறங்கும் ஜெமினாஹ், 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 18 வயதான இவர் 64 இடங்கள் முன்னேறி 61வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களில் பூனம் மற்றும் தீப்தி ஷர்மா முறையே 8 மற்றும் 9 வது இடத்தை பிடித்துள்ளனர். எக்டா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பெற்றார்.

வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி ஒரு இடம் அதிகரித்து 4வது இடத்தை அடைந்தார்.

மந்தனாவை பெண்கள் கிரிக்கெட்டின் கோலி என வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்
  • 2018லிருந்து 15 போட்டிகளில் ஆடியுள்ளார் ஸ்ம்ரிதி மந்தனா
  • 90 ரன்கள் அடித்து தொடரை வெல்ல காரணமாக இருந்தார் மந்தனா
தொடர்புடைய கட்டுரைகள்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
Advertisement