Listen to the latest songs, only on JioSaavn.com
 

முத்தரப்புத் தொடரின் 5வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

Updated: 08 February 2020 13:41 IST

ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்ததால், ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஒரு அசாதாரண பேட்டிங் நிகழ்ச்சியை நிகழ்த்தியது.

Australia Women vs India Women: Smriti Mandhana, Shafali Varma Shine As India Beat Australia In Tri-Series
ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். © Twitter

மெல்போர்னில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்கான வேட்டையில் தங்களைத் தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி. ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்ததால், ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஒரு அசாதாரண பேட்டிங் நிகழ்ச்சியை நிகழ்த்தியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது இதில், ஆஷ்லே கார்ட்னர் 57 பந்துகளில் 93 ரன்களும், மெக் லானிங்க்ஸ் 22 பந்திகளில் 37 ரன்களும் குவித்தனர். 

இலக்கை துரத்திய இந்திய அணி 19.4 ஓவரில் 177 ரன்கள் குவித்து போட்டியை வென்றது.

16 வயதான ஷஃபாலி வர்மா 28 பந்துகளில் சிறப்பாக ஆடி 49 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும்.

கடினமான சேஸிங்கில் ஸ்மிருதி மந்தனாவும் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் குவித்தார்.

கடைசியில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 பந்தில் 20 ரன்களும், தீப்தி ஷர்மா 4 பந்துகளில் 11 ரன்களும் குவித்து வெற்றி பெற உதவினர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தீப்தி சர்மா (2/27) இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜேஸ்வரி கயக்வாட் (1/34), ராதா யாதவ் (1/34), ஹார்லீன் தியோல் (1/21) தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எலிஸ் பெர்ரி (1/33), மேகன் ஷட் (1/26), நிக்கோலா கேரி (1/27) தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றிக்கு பிறகு இந்தியா புள்ளிகள் அட்டவணையில் இங்கிலாந்துக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தத் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா.

தொடரின் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

போட்டி விவரம்: 

ஆஸ்திரேலியா பெண்கள்: 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்கு 173 (ஆஷ்லீ கார்ட்னர் 93; தீப்தி சர்மா 2/27).

இந்தியா பெண்கள்: 19.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 177 (ஸ்மிருதி மந்தனா 55, ஷஃபாலி வர்மா 49; மேகன் ஷட் 1/26).

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலிய பெண்கள் அணி 173 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது
  • ஸ்மிருதி மந்தனா 55 மற்றும் ஷஃபாலி வர்மா 49 ரன்கள் குவித்தனர்
  • இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா
5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
“எனக்கு கால் பண்ணுங்க” - கேட்டி பெர்ரியிடம் கூறிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
“எனக்கு கால் பண்ணுங்க” - கேட்டி பெர்ரியிடம் கூறிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா!
“ஷஃபாலி மற்றும் ஸ்மிருதிக்கு பந்து வீச விருப்பமில்லை” - ஆஸி. பந்துவீச்சாளர்!
“ஷஃபாலி மற்றும் ஸ்மிருதிக்கு பந்து வீச விருப்பமில்லை” - ஆஸி. பந்துவீச்சாளர்!
Advertisement