"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!

Updated: 07 March 2019 17:03 IST

ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுரின் காயம் காரணமாக அணியின் பேட்டிங்கின் நம்பிக்கையாக விளங்குகிறார்.

Smriti Mandhana Admires Mithali Raj For Her Ability To Take Pressure
ஐசிசியின் 2018ம் ஆண்டுக்கான சிறந்த பெண் கிரிக்கெட்டராக தேர்வு செய்யப்பட்ட ஸ்மிருதி மந்தனா. © AFP

ஐசிசியின் 2018ம் ஆண்டுக்கான சிறந்த பெண் கிரிக்கெட்டராக தேர்வு செய்யப்பட்ட ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுரின் காயம் காரணமாக அணியின் பேட்டிங்கின் நம்பிக்கையாக விளங்குகிறார். தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் மந்தனா. அணியில் 10 வருடத்துக்கும் மேலாக அனுபவம் உள்ள மிதாலிராஜிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வதாக மந்தனா தெரிவித்துள்ளார். 

தனியார் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய மந்தனா ''அணிக்காக மிதாலிராஜின் உழைப்பு அதீதமானது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது பேட்டிங்கை இந்திய அணி பெரிதும் நம்பி களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. உங்கள் விக்கெட்டை இழப்பது என்பதை தாண்டி, உங்களது விக்கெட் ஆட்டத்தை மாற்றும் என்பதை உணர்த்தியுள்ளார்.

அவர் ஒரு கூலான நபர். இரண்டு மூன்று டாட் பால்களை சந்தித்தாலும் கூலாக அணியை மீட்டெடுக்கும் நபர்" என்று மிதாலியை புகழ்ந்தார் மந்தனா.

2018ம் ஆண்டு ஐசிசி விருதை பெற்ற மந்தனா, "சென்ற வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் ஆடிவந்ததால் டிசம்பர் இறுதியில் ஓய்வு தேவைப்பட்டதை உணர்ந்தேன்.  அதனால் பயிற்சிக்கு செல்லாமல், ஜிம்முக்கு செல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த செய்தி என்னை ஊக்கப்படுத்தியது". மீண்டும் எனர்ஜியோடு ஆடத்துவங்கியுள்ளதாக மந்தனா தெரிவித்தார்.

இந்த தொடரில் அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் நம்பிக்கையளிப்பதாக கூறிய ஸ்மிருதி, இந்திய அணியில் ஜெமினா, அருந்ததி ரெட்டி, ராதா, ஹர்லீன் ஆகியோர்கள் தனது அறையில் குறும்பு செய்பவர்கள் என்றும் கூறினார்.

கடந்த ஒருவருட காலமாக எனது ஐபாடில் நான் தனியாக படம் பார்த்ததே இல்லை. என்னோடு எப்போதும் 4 பேர் இருப்பார்கள் என்றார்.

இங்கிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார் மந்தனா. இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்துள்ளது இந்திய பெண்கள் அணி.

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்துடனான 3 போட்டி கொண்ட தொடருக்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார் மந்தனா
  • ஐசிசியின் 2018ம் ஆண்டுக்கான சிறந்த பெண் கிரிக்கெட்டர் பட்டம் பெற்றார்
  • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் மந்தனா
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த ஆண்டின் ஐசிசி மகளிர் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்ற ஸ்மிருதி மந்தனா!
இந்த ஆண்டின் ஐசிசி மகளிர் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்ற ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
Advertisement