"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்

Updated: 18 September 2019 15:15 IST

ஆஷஸ் தொடரில் ஸ்மித் நான்கு போட்டிகளில் இடம்பெற்று, 774 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 110.57.

Steve Smith "Makes Ugliest Hundreds I
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை ஸ்மித் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி தலைப்பு செய்தியாக மாறினார். ஆனால், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஸ்மித்தை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார். "விராட் கோலி விளையாடுவதை நான் ரசிப்பேன். ஆனால், ஸ்மித் விளையாடுவது, நான் பார்த்ததிலேயே மிக மோசமாக சதமடிக்கும் வீரராக உள்ளார். இருந்தும், அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து கொண்டுள்ளார்," என்று சிறந்த ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸ் நீயூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கூறினார்.

"போட்டியை காண்பவர்கள் அதை பார்த்து, 'வாவ் என்ன ஒரு சிறப்பான பேட்டிங் முறை' என்று நினைக்க வேண்டும். அதை தவிர்த்து, 'ஹோ, அவர் அதை எப்படி அடிக்க முடியும்?' இதில் எது விராட் கோலி," தென்னாப்பிரிக்க லெஜண்ட் கூறினார்.

பந்து சேத ஊழலுக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்ட பின்னர், தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸில் தொடரின் சிறப்பான வீரராக முடித்தார். நான்கு போட்டிகளில் 774 ரன்கள் குவித்து பிராட்மேனெஸ்க் சராசரியாக 110.57. இந்தத் தொடரில் இரட்டை சதங்கள் உட்பட மூன்று சதங்கள் மற்றும் ஏழு இன்னிங்ஸில் 3 அரைசதங்கள் குவித்தார். கடைசி இன்னிங்ஸில் 50க்கும் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஸ்மித்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை ஸ்மித் வீழ்த்தினார். ஆஷஸ் தொடரின் போது நான்காவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகடெஸ்ட் தொடரில் கோலி இரண்டு அரை சதங்கள் குவித்தார். அக்டோபரில் மூன்று போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடருக்கு இந்தியா விளையாடும்போது, அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் கோலிக்கு அடுத்த சவால் காத்துக்கொண்டுள்ளது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement