மகளுக்காக மருத்துமனையில் இருந்துவிட்டு வந்து சதமடித்து நெகிழ வைத்த ஜேசன் ராய்!

Updated: 18 May 2019 19:21 IST

இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராயின் சதத்தால் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நிர்ணயித்த 341 என்ற இலக்கை எளிதாக துரத்தியது.

Jason Roy Scores Century After Daughter
© AFP

இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராயின் சதத்தால் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நிர்ணயித்த 341 என்ற இலக்கை எளிதாக துரத்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஜேஸன் ராய் செய்தது தான். ஆட்டத்துக்கு முன்பு வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கியுள்ளார். காரணம் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று திரும்பியிருந்தார். அதன்பின் 114 ரன்கள் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

ஆட்டத்துக்கு முன்பு 7 மணி நேரம் மருத்துவமனையில் தனது மனைவியுடன் குழந்தையின் உடல்நலக்குறைவுக்காக தங்கியிருந்தார்.

தூங்காமல் இருந்த அவர் நேரடியாக போட்டிக்கு வந்து சதமடித்தார். பேட்டிங் மட்டுமல்ல. ஒரு சிக்ஸரையும் தடுத்தார்.

இது மிகவும் கடினமான நாளாக இருந்தது. ஆனால் இந்த சதம் எனக்கும், என் குடும்பத்துக்கும் மறக்க முடியாத நாள் என்றார்.

நாங்கள் அதிகாலை 1:30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றோம். காலை 8:30 மணிக்கு தான் மைதானத்துக்கு திரும்பினேன். பிறகு சிறிது நேரம் பயிற்சிக்கு பின் களமிறங்கியதாக கூறினார்.

11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸருடன் 89 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவுக்ஜு எதிராக தனது உலகக் கோப்பை பயணத்தை துவங்கியது.


(With AFP inputs)
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!
கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின்
"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின் 'வாவ்' ஃபீல்டிங்...!
Advertisement