சுப்மன் கில் இரட்டை சதம் - வெற்றியை நோக்கி இந்தியா ஏ அணி!

Updated: 10 August 2019 11:16 IST

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தனது முதல்தர போட்டில் இரட்டை சதத்தை நிறைவு செய்துள்ளார்.

Shubman Gill Smashes Record With Double Ton, India A Close In On Win Against West Indies A
சுப்மன் கில் 250 பந்தில் 204 ரன்கள் குவித்து கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார். © Twitter

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தனது முதல்தர போட்டில் இரட்டை சதத்தை நிறைவு செய்துள்ளார். இவர் கேப்டன் விஹாரியுடன் சேர்ந்து இந்திய அணியை மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடனான மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்டில் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. 19 வயதான சுப்மன்கில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். அவர் 250 பந்தில் 204 ரன்கள் குவித்து கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார். கம்பீர் 2002ல் ஜிம்பாப்பேயுடனான ஆட்டத்தில் 218 ரன்கள் குவித்தார். அப்போது அவருக்கு வயது 20.

கேப்டன் விஹாரி 118 ரன்களை குவித்தார், கில்லின் இரட்டை சதத்துடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு கில்-விஹாரி இணை 315 ரன்கள் குவித்தது. இந்தியா ஏ 365/4 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. 

பின்னர், 373 என்ற இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி ஆட்ட நேரமுடியில் 37 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன கில் இரண்டாவது இன்னிங்ஸில் 19 பவுண்டரி 2 சிக்ஸருடன் 204 ரன்களை குவித்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 201 ரன்களுக்கும், மேற்கிந்திய தீவுகள் 194 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

கில் சிறப்பாக ஆடியும் இந்திய சீனியர் அணியில் இடம் கிடைக்கவில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • 19 வயதான சுப்மன்கில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்
  • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 250 பந்தில் 204 ரன்கள் குவித்தார் கில்
  • சுப்மன் சில் கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்
"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்
Advertisement