டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!

Updated: 13 September 2019 16:15 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் அணியில் சுப்மன் கில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார். இதை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.

Shubman Gill "Honoured" After Being Picked For South Africa Test Series
27 வயதான ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில்லை மாற்ற தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது. © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் அணியில் சுப்மன் கில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார். இதை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகும், தொடக்க வீரரான கே எல் ராகுல் தன்னை நிரூபிக்க தவறிவிட்டார். 27 வயதான ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில்லை மாற்ற தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது. 20 வயதான சுப்மன் கில், டெஸ்ட் போட்டி அணியில் இடம்பெற்றதற்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நீலமோ வெள்ளையோ நாட்டுக்காக ஆடுவதில் எப்போதும் பெருமையான ஒன்று," என்று ட்விட் செய்தார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அணியை அறிவித்த பின்னர், தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத், ரோஹித் ஷர்மாவுக்கு டாப் ஆர்டர் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றார்.

டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணியில் இடம்பெற்ற உமேஷ் யாதவ், தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை.

செப்டம்பர் 26 முதல் விஜயநகரத்தில் நடைபெறும் மூன்று நாள் சுற்றுப்பயண போட்டியில் தென்னாப்பிரிக்கர்களை எதிர்கொள்ளும் வாரியத் தலைவர் XI அணிக்கு ரோஹித் கேப்டனாக இருப்பார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக அதிக ரன்கள் குவித்தது, தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டதும் 20 வயதான கில் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. தொடரில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேற்கிந்திய தீவுகளின் சீனியர் அணியில் அவர் சேர்க்கப்படாதது, அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

டெஸ்ட் தொடருக்கான அணி: விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, செதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மன் கில்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்
"ராகுல் டிராவிட் சொன்ன அடிப்படை மந்திரம் இதுதான்" - சுப்மன் கில்
சுப்மன் கில் இரட்டை சதம் - வெற்றியை நோக்கி இந்தியா ஏ அணி!
சுப்மன் கில் இரட்டை சதம் - வெற்றியை நோக்கி இந்தியா ஏ அணி!
"அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தது... ஆனால் தொடர்ந்து போராடுவேன்" - சுப்மன் கில்
"அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தது... ஆனால் தொடர்ந்து போராடுவேன்" - சுப்மன் கில்
Advertisement