Listen to the latest songs, only on JioSaavn.com
 

"அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தது... ஆனால் தொடர்ந்து போராடுவேன்" - சுப்மன் கில்

Updated: 24 July 2019 16:22 IST

பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஆடிய இந்திய ஏ அணியில் அதிக ரன்கள் எடுத்த சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை.

Shubman Gill Disappointed After India Snub, Vows To Fight On
மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஆடிய இந்திய ஏ அணியில் அதிக ரன்கள் எடுத்தார் சுப்மன் கில் © AFP

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில்,  சுப்மன் கில் ஒருநாள் போட்டியிலோ அல்லது டி20 போட்டியிலோ இடம்பெறாதது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஆடவிருக்கும் இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஆடிய இந்திய ஏ அணியில் அதிக ரன்கள் எடுத்த சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை. "இந்திய அணி அறிக்கும் போது, என்னுடைய பெயரை ஒரு அணியிலாவது எதிர்பார்த்தேன். என்னை தேர்வு செய்யாதது எனக்கு வருத்தமளித்தது. ஆனால், இதை யோசித்து கொண்டு என்னுடைய நேரத்தை செலவிட போவதில்லை. என்னால் முடிந்த வரை சிறப்பாக ஆடி ரன்களை குவித்து தேர்வுக் குழுவினரை ஈர்ப்பேன்" என்று கில் கிரிக்கெட் நெக்ஸ்ட்டில் தெரிவித்தார்.

"இந்தத் தொடர் சிறப்பானதாக இருந்தது. இதில் 4-1 என்ற கணக்கில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது. அந்த 50-களில் இரண்டு சதங்களாவது அடித்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொள்வேன்."

இந்திய ஏ அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு நடந்த தொடரில் சுப்மன் கில் 218 ரன் குவித்து அசத்தினார். ஆனால், இந்த அணியில் அவர் இடம் பெறாதது பெறும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் அஜின்க்யா ரஹானே இருவரும் மூன்று ஒருநாள் போட்டியில் இணைக்கப்படாதது ஆச்சரியமாக இருகிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஏன் ஒரு சில வீரர்கள் மட்டும் தான் அனைத்து விதமான போட்டியிலும் இடம்பெற்றுள்ளார்கள் என்று தேர்வுக்குழுவினரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் கங்குலி. " தேர்வுக்குழுவினர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அதே வீரர்களை தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது. இதனால் வீரர்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.. வெறும் சிலரே அனைத்து விதமாக போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார்கள்.. பெரிய அணிகளில் எப்போதும் நிலையான வீரர்கள் இருந்தனர்.. எல்லோரையும் மகிழ்விக்க வேண்டிய தேவையில்லை. நாட்டுக்காக விளையாட நிலையான வீரர்களை தேர்வு செய்வது அவசியம்..@bcci," என்று கங்குலி ட்விட் செய்தார்.

"அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் பலர் அனைத்து விதமாக கிரிக்கெட்டிலும் ஆடக்கூடயவர்கள்.. ரஹானே ஒருநாள் போட்டியில் இல்லாதது.. சுப்மன் கில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது.. " என்றார்.

ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவிருக்கும் தொடருக்கு விராட் கோலி தான் கேப்டன். தோனி இரண்டு மாதங்கள் ஓய்வு கேட்டு விலகியதால், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிக்கு ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
NZ vs IND: 2வது டெஸ்ட்டில் தொடக்க வீரராக அறிமுகமாகிறார் சுப்மன் கில்?
NZ vs IND: 2வது டெஸ்ட்டில் தொடக்க வீரராக அறிமுகமாகிறார் சுப்மன் கில்?
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
Ranji Trophy: களத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சும்பன் கில்!
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
விராட் கோலியின் 10 வருட சாதனையை கடந்த சுப்மன் கில்
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
Advertisement