"மூத்த வீரர்கள் மட்டையால் தாக்கினார்கள்" - அப்ரிடிக்கு ஆதரவு தரும் அக்தர்

Updated: 10 May 2019 18:13 IST

கேம் சேஞ்சர் புத்தகம் சம்பந்தமாக அப்ரிடி மீது வந்துள்ள சர்ச்சைக்கு சோயிப் அக்தர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Shoaib Akhtar Backs Shahid Afridi Claim, Says Senior Players Wanted To Beat Him With Bat
அக்தர், அப்ரிடி கூறியுள்ள அனைத்து விஷயங்களையும் உண்மை என்று கூறுயுள்ளார். © AFP

கேம் சேஞ்சர் புத்தகம் சம்பந்தமாக அப்ரிடி மீது வந்துள்ள சர்ச்சைக்கு சோயிப் அக்தர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அக்தர், அப்ரிடி கூறியபடி "மூத்த வீரர்களின் குறுக்கீடு அணியில் பெரிய அளவில் இருந்தது. அவர்கள் இளம் வீரர்களை சரியாக நடத்தவில்லை" என்று கூறினார். இதற்காக ஒரு நிகழ்வையும் முன்வைத்தார் அக்தர் 'ஆஸ்திரேலிய தொடரின் போது நான்கு மூத்த வீரர்கள் பேட்டால் என்னை அடித்தனர்' என்று அப்ரிடி தனது புத்தகத்தில் கூறியிருந்தார். அதனை அக்தர் ஆமோதித்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் சென்னை டெஸ்ட்டுக்கு முன் தன்னை பேட்டிங் பயிற்சிக்கு அனுமதிக்காததையும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் தான் கண்கூட பார்த்ததாகவும், மூத்த வீரர்களின் நடவடிக்கை மோசமானதாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனை உள்ளூர் விளையாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும், மியாந்தத் அப்ரிடியை அழைத்து மீடியாக்களில் தன்னை புகழச் சொன்னதாகவும் கூறியுள்ளார். அதன்பின்னரே அவர் மீது மரியாதை குறைந்ததாகவும் கூறினார்.

அக்தர், அப்ரிடி கூறியுள்ள அனைத்து விஷயங்களையும் உண்மை என்று கூறுயுள்ளார். மூத்த வீரர்கள் தரக்குறைவான விஷயங்களில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக இம்ரான் ஃபர்ஹத் அப்ரடியை விமர்சித்திருந்தார். அவரை சுயலாபத்துக்காக மற்ற வீரர்களின் வாழ்வை கெடுக்கிறார் என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • சர்ச்சைக்கு பிறகு சோயிப் அக்தர் அப்ரிடிக்கு ஆதரவாக பேசியுள்ளார்
  • கேம் சேஞ்சர் புத்தகம் சம்பந்தமாக அப்ரிடி மீது சர்ச்சை எழுந்துள்ளது
  • மூத்த வீரர்கள் தரக்குறைவான விஷயங்களில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டினார் 
தொடர்புடைய கட்டுரைகள்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"மோசமாக உள்ளது" - ஐசிசியின் டெஸ்ட் ஜெர்ஸி மாற்றம் குறித்து சோயிப் அக்தர்!
"மோசமாக உள்ளது" - ஐசிசியின் டெஸ்ட் ஜெர்ஸி மாற்றம் குறித்து சோயிப் அக்தர்!
Advertisement