"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்

Updated: 08 October 2019 18:29 IST

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் முகமது ஷமியை பாராட்டியுள்ளார்.

Shoaib Akhtar Says Mohammed Shami Sought Advice After World Cup But "Sad" Pakistan Bowlers Didn
முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். © Instagram

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் முகமது ஷமியை பாராட்டியுள்ளார். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெளியேறிய பின்னர் முகமது ஷமி அவரை ஆலோசனைக்காக அழைத்ததாகவும், அந்த நேரத்தில் இந்திய பந்து வீச்சாளரின் வெற்றியை அவர் முன்னறிவித்ததாகவும் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் சோயிப் அக்தர் தெரிவித்தார். இருப்பினும், அவரிடமிருந்து எந்த ஆலோசனையும் பெறாத பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சோயிப் அக்தர் ஏமாற்றமடைந்தார். 

"இந்தியா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பிறகு, ஷமி என்னை அழைத்து, இந்தியாவுக்கு நல்லது செய்ய முடியாது என்று வருத்தப்படுவதாகக் கூறினார். நம்பிக்கையை இழக்க வேண்டாம், ஆனால் அவரது உடற்தகுதியை பராமரிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்" என்று அக்தர் கூறினார்.

"அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவருக்கு ஒரு தலைகீழ் மாற்றம் வர வேண்டியுள்ளது. நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கின் ராஜாவாக முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன்," என்று அவர் கூறினார்.

தனது நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்களின் தற்போதைய சூழ்நிலையால் அக்தர் சோகமடைந்ததாகவும் ஷமிக்கு அவர் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

" இப்போது பாருங்கள் அவர் விசாகப்பட்டினத்தில் சிறப்பான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நான் அவரி நினைத்து சந்தோஷப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக, நமது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று என்னிடம் கேட்கவில்லை, ஆனால் ஷமி போன்ற இந்திய பந்து வீச்சாளர்கள் அதைச் செய்கிறார்கள். எனது நாட்டைப் பொருத்தவரை இது ஒரு சோகமான சூழ்நிலை" என்று கூறினார். 

நான்காவது இன்னிங்ஸில் ஷமி தனது மந்திரங்களைத் தொடர்ந்தார். ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்தியா 191 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டியது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்
"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்
Advertisement