பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!

Updated: 12 September 2019 13:48 IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Shoaib Akhtar Disappointed With Sri Lanka Players
பாகிஸ்தான் நேஷ்னல் அணி " எப்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு உறுதுணையாக இருந்துள்ளது" என்று கூறியுள்ளார் அக்தர். © Twitter

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நேஷ்னல் அணி " எப்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு உறுதுணையாக இருந்துள்ளது" என்று கூறியுள்ளார். இலங்கையின் சிறந்த வீரர்கள், டி20 கேப்டன் லசித் மலிங்கா, மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் தவிர தினேஷ் சந்திமல், சுரங்கா லக்மல், திமுத் கருணாரத்ன, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் செப்டம்பர் 27 தொடங்கவிருக்கும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர்.

"பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணித்த 10 வீரர்களால் நான் ஏமாற்றமடைந்தேன். இலங்கை கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் பெரிதும் ஆதரவு தெரிவித்தது. இலங்கையில் சமீபத்தில்  ஈஸ்டரின் போது ஏற்பட்ட தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் அண்டர்-19 அணி இப்போது அங்கு விளையாட சென்றுள்ளது," என்று அக்தர் ட்விட் செய்தார்.

"1996 உலகக் கோப்பையின் போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததை யார் மறக்க முடியாது. கொழும்பில் நட்புரீதியான போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த அணியை அனுப்பியது. இலங்கையிலிருந்து பரிமாற்றத்தை எதிர்பார்க்கிறோம். அவர்களின் குழு ஒத்துழைக்கிறது, வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும்," என்றார்.

இதன் பின்னர், இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக லஹிரு திரிமன்னேவை இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அறிவித்துள்ளது. சுற்றுப்பயணத்தின் போது டி 20 போட்டிகளில் தசுன் ஷானகா அணியை வழிநடத்துவார்.

2009 ஆண்டு வீரர்கள் வந்த பேருந்தை தீவிரவாதிகள் தாக்கியதில், 8 பேர் உயிரிழந்து, பலரும் காயமடைந்துள்ளனர். இதனால், இப்போது வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுக்கின்றனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்
"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
“ஆர்ச்சர்… அப்படி செஞ்சிருக்கக் கூடாது!”- ஆஷஸ் சர்ச்சை; பாயும் சோயப் அக்தர்
Advertisement