"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்

Updated: 06 August 2019 17:30 IST

இந்தியாவை பாகிஸ்தான் 1999 மற்றும் 2003ம் ஆண்டுகளில் வீழ்த்தியிருக்க முடியும். குறிப்பாக 2003ல் இந்தியாவை வீழ்த்தியிருப்போம் என்றார் சோயிப் அக்தர்.

Shoaib Akhtar Blames Waqar Younis
2003ம் ஆண்டு உலகக் கோப்பையில் தோற்றதற்கு கேப்டன் வாக்கார் யூனிஸ் தான் காரணம் - சோயிப் அக்தர். © AFP

இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை உலகக் கோப்பையில் 7 முறை மோதியுள்ளது. ஆனால் ஒரு போட்டியை கூட பாகிஸ்தான் வென்றதில்லை. ஐசிசி போட்டிகளிலும் 2017க்கு முன் வரை பாகிஸ்தான் வெல்லாமலே இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ''இந்தியாவை பாகிஸ்தான் 1999 மற்றும் 2003ம் ஆண்டுகளில் வீழ்த்தியிருக்க முடியும். குறிப்பாக 2003ல் இந்தியாவை வீழ்த்தியிருப்போம். ஆனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அது எனது வாழ்நாளில் மோசமான போட்டி. அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 72 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த மோசமான பந்துவீச்சுக்கு வாக்கார் யூனிஸின் மோசமான தலைமையே காரணம்" என்று விமர்சித்துள்ளார்.

"யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியா சிறப்பாக ஆடியது. ஆனால் நாங்கள் வென்றிருக்க முடியும்" என்றார்.

"என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட் செய்து பந்துவீசியிருந்தால் வென்றிருக்க முடியும். ஆனால் எனது உடல் தகுதியும், வக்காரின் மோசமான தலைமையும் தான் தோல்விக்கு காரணம்" என்றார்.

2003ம் ஆண்டு முதலில் பேட் செய்தது. 7 விக்கெட்டுகளை இழந்து அன்வரின் சதத்தால் 273 ரன்கள் குவித்தது. 

இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவின் துவக்க வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் 6 ஓவர்களில் 50 ரன்கள் குவித்தனர். சேவாக் 21 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். சச்சின் 75 பந்தில் 98 ரன்கள் குவித்து அக்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ட்ராவிட் 44, யுவராஜ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 26 பந்து மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டி குறித்து பேசிய அக்தர், "நாங்கள் 30, 40 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். 273 என்ற இலக்கு போதாது என அணி எண்ணியது" என்று கூறினார்.

மேலும், "நான் பந்துவீச ஆரம்பிக்கும் போது இடது முழங்காலில் காயம் இருந்தது. அதனால், என்னால் பந்து வீச முடியவில்லை. இந்திய துவக்க வீரர்கள் என் பந்துவீச்சில் தாக்குதலை துவங்கினர். சச்சின் பாயிண்ட் திசையில் சிக்சர் அடித்தார்".

"கேப்டன் என் பந்துவீச்சை ஆரம்பத்தில் நிறுத்தினார். கடைசியில் கொடுத்தபோது பவுன்ஸர் வீசி அவரை ஆட்டமிழக்க செய்தேன்" என்றார் அக்தர். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அப்போது நான் 22 பேருக்கு எதிராக விளையாடினேன்" - சூதாட்டம் குறித்து சோயிப் அக்தர்
"அப்போது நான் 22 பேருக்கு எதிராக விளையாடினேன்" - சூதாட்டம் குறித்து சோயிப் அக்தர்
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இரங்கல்!
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இரங்கல்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
Advertisement