இந்திய ஏ அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக ஷிகர் தவான்!

Updated: 31 August 2019 12:12 IST

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு ஷிகர் தவானை இந்திய ஏ அணியில் இணைக்க முடிவெடுத்துள்ளோம் - பிசிசிஐ

Shikhar Dhawan To Play For India A, Vijay Shankar Ruled Out Due To Injury
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படவில்லை. © AFP

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய ஏ அணிக்காக ஷிகர் தவான் இணைக்கப்பட்டுள்ளார். நடந்து வரும் சுற்றுப்பயணத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படவில்லை. உலகக் கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய ஷிகர் தவான், மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றார். ஆனால், அவர் ஆடிய 5 இன்னிங்ஸில் மொத்தமாக 65 ரன்கள் மட்டுமே குவித்தார். இந்தச் சுற்றுப்பயணத்தில், தவான் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றார். தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சஹால், இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிசிசிஐ அறிக்கைப்படி, "அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு ஷிகர் தவானை இந்திய ஏ அணியில் இணைக்க முடிவெடுத்துள்ளோம்," என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், காயம் காரணமாக இந்திய ஏ அணியிலிருந்து விலகியுள்ளார்.

"வலது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விஜய் சங்கர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்," ப்ரஸ் ரிலீஸில் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், பும்ரா வீசிய யாக்கர் பந்தில் விஜய் சங்கர் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினார்.

அவர் அதன்பிறகு டிஎன்பிஎல் போட்டியில் இடம்பெற்றார். பின்னர் இந்திய ஏ அணியிலும் விளையாடினார். மீண்டும் காயம் ஏற்பட்ட நிலையில் விஜய் சங்கர் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
Advertisement