உலகக் கோப்பையிலிருந்து தவான் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு!

Updated: 11 June 2019 14:14 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோல்டர் நைல் வீசிய பந்தில் காயமடைந்தார்.

Shikhar Dhawan Ruled Out Of World Cup For 3 Weeks With Thumb Injury
மூன்று வாரம் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல். © AFP

உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வார ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோல்டர் நைல் வீசிய பந்தில் காயமடைந்தார். இருப்பினும் சதமடித்து அசத்தினார். இந்திய அணி ஃபீல்டிங்கின் போது அவருக்கு பதிலாக ஜடேஜா ஃபீல்டிங் செய்தார். ஃபார்மில் இருக்கும் தவான் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக பன்ட் அல்லது ஷ்ரேயாஸ் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 109 பந்தில் 117 ரன்கள் குவித்தார் தவான். இதில் 16 பவுண்டரிகளும் அடங்கும்.

தவான் விலகியிருக்கும் இந்த சமயத்தில், இந்திய அணி ரோஹித் ஷர்மாவுக்கு துணையாக தொடக்க வீரரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நோட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிஜ் மைதானத்தில் 2015 உலகக் கோப்பை ரன்னர்-அப் அணியான நியூசிலாந்தை சந்திக்கிறது இந்திய அணி. 

"அணியின் கடுமையான முயற்சியினால் இந்த வெற்றி அமைந்துள்ளது. இது அணியின் சிறப்பு தன்மையை வெளிகாட்டுகிறது. ஆட்ட நாயகம் விருது பெற்றது எனக்கு மிகவும் மகழ்ச்சியளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருந்தது. ஃபீல்டிங் சிறப்பாக அமைந்தது. அதனால், கேட்ச்சகளும் பிடிக்க முடிந்தது. பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுளை வீழ்த்தினர்" என்று ஆஸ்திரேலியாவுடனான போட்டிக்கு பிறகு தவான் கூறினார்.

இந்திய அணிக்காக தவான் 130 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 44 சராசரியுடன் 5,480 ரன்கள் குவித்துள்ளார். அதில் 17 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும்.
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement