வைரலாகிய ஷிக்கர் தவானின் புல்லாங்குழல் வீடியோ

Updated: 07 June 2018 22:39 IST

கடந்த மூன்று ஆண்டுகளாக, புல்லாங்குழல் வாசிக்க கற்று வருகிறார். இதுவரை தனது சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி ஷிக்கர் தவான் பகிர்ந்ததில்லை

Shikhar Dhawan Reveals His Musical Side In Video Gone Viral
Shikhar Dhawan showed his fans a different side © AFP

ஷிக்கர் தவான் புல்லாங்குழல் வாசிப்பது போன்ற வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்திற்காக, ‘கப்பார்’ என அழைக்கப்படும் தொடக்க ஆட்டக்காரர், தனது இசை திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார் சிக்கர் தவான்

“வணக்கம். என்னுடைய இன்னொரு முகத்தை, மற்றும் என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றை பகிர ஆசைப்படுகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிக்க கற்றுகொள்கிறேன். எனது குரு வேனுகோபால்ஜியிடம் கற்றுக்கொண்டதற்கு பெருமைப்படுகிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கு, இது என் முதல் முயற்சி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, புல்லாங்குழல் வாசிக்க கற்று வருகிறார். இதுவரை தனது சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி ஷிக்கர் தவான் பகிர்ந்ததில்லை.

கிரிக்கெட் விளையாட்டில், சமீபத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் 2018 தொடரில், சிறப்பாக விளையாடினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக, ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். 16 ஆட்டங்களில், 497 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2018 தொடரில் 38க்கு மேல் சராசரி பெற்றுள்ளார்.அதிகபட்ச ரன்களாக 92 ரன்கள் எடுத்து, ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணியை இறுதி போட்டிக்கு எடுத்து சென்றார். ஆனால், இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது ஹைதரபாத் அணி.

Comments
ஹைலைட்ஸ்
  • ஷிக்கர் தவான் இசை கருவி வாசிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்
  • ஐபிஎல் 2018 தொடரில் 38க்கு மேல் சராசரி பெற்றுள்ளார்
  • ஷிக்கர் தவானின் இசை திறமையை கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
காயத்திலிருந்து மீண்டு
காயத்திலிருந்து மீண்டு 'பாட்டில் கேப் சேலஞ்ச்' செய்த ஷிகர் தவான்!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
“மைதானம் உங்களை மிஸ் செய்யும்”- தவானுக்கு மோடியின் உருக்கமான ட்வீட்!
“மைதானம் உங்களை மிஸ் செய்யும்”- தவானுக்கு மோடியின் உருக்கமான ட்வீட்!
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
Advertisement