கிரிஸ் கெயிலை பார்த்து 'ஜமைக்காவின் டேலர் மெஹந்தி' என அழைத்த தவான்

Updated: 06 June 2018 09:17 IST

பஞ்சாப் அணிக்காக விளையாடிய கிரிஸ் கெயில், அணியின் இரண்டாவது அதிக ரன் சேர்த்த ஆட்டக்காரராக உள்ளார்

Shikhar Dhawan Calls Chris Gayle The
© Twitter

இந்திய அணி மற்றும் ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிக்கர் தவான், மேற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிரிஸ் கெயிலை, இந்திய பாடகர் ‘டேலர் மெஹந்தி’ என அழைத்துள்ளார். ஆட்டக்களத்திலும், வெளியிலும் எப்போதும் அதிரடியாகவும், அன்பாகவும் காணப்படும் கிரிஸ் கெயிலுடன் எடுத்துக்கொண்ட்ட செல்ஃபியை தனது டிவிட்டர் பக்கத்தில் சிக்கர் தவான் பகிர்ந்துள்ளார். “நான் யாரை சந்திருத்திக்கிறேன் என்று பாருங்கள்.. ஜமைக்காவின் டேலர் மெஹந்தி.. சொல்லு #யூனிவர்சல்பாஸ்” என்று பதிவிட்டுள்ள புகைப்படத்தில், தலைபாகையுடம் கிரிஸ் கெயில் காணப்பட்டார்.

2018 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்காக விளையாடிய கிரிஸ் கெயில், அணியின் இரண்டாவது அதிக ரன் சேர்த்த ஆட்டக்காரராக உள்ளார். முதலில் கே.எல் ராகுல் (659) இடம்பெற்றுள்ளார். 11 போட்டிகளில் விளையாடிய கிரிஸ் கெயில் 368 ரன்கள், 40.88 சராசரியுடன் உள்ளார். அதிகமாக, ஹைதரபாத்துடனான முதல் ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய சிக்கர் தவான், ஐபிஎல் 2018 தொடரில், அதிக ரன் சேர்த்த ஆட்டக்காரர்கள் பட்டியலில், 16 போட்டிகளில் விளையாடி 497 ரன்கள் உடன் பத்தாவது இடத்தில் உள்ளார். அதிகமாக 97 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்துள்ளார். எனினும், ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணி ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.

ஐபிஎல் இறுதி போட்டிக்குப் பிறகு, சிக்கர் தவான் தனது டிவிட்டர் பக்கத்தில், ரசிகர்களுக்கு நன்றி கூறினார். “சில சமயம் வெற்றியும், பாடமும் கிடைக்கும். ஆட்டம் இழந்தாலும், சோர்ந்து போகவில்லை, அடுத்த வருடம், மேலும் வலிமையாகவும் உறுதியாகவும் திரும்ப வருவோம். இந்த ஐபிஎல் முழுவதும், தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணி கிரிஸ் கெயிலை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது
  • ‘யூனிவர்ஸ் பாஸ்’ கிரிஸ் கெயில் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றவில்லை
  • 2018 தொடரில், பஞ்சாப் அணிக்கான இரண்டாவது அதிக ரன் சேர்த்த ஆட்டக்காரர்
தொடர்புடைய கட்டுரைகள்
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
#Preview கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
20ம் ஆண்டு கார்கில் தினம்: விளையாட்டு வீரர்கள் அஞ்சலி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன் ஷிகர் தவான் தீவிர பயிற்சி!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
Advertisement