"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!

Updated: 20 September 2019 12:05 IST

யுவராஜ் சிங் அந்த சாதனையை புரியும் போது, ரவி சாஸ்திரி வர்ணனையாளராக இருந்தார்.

Ravi Shastri Relives The Magic Of Yuvraj Singh
மிக விரைவாக அரைசதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் யுவராஜ் சிங். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டி20 போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 சிக்ஸர் அடித்தார் யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு நடந்த சாதனைக்கு இன்று 12 வருடங்கள் ஆகிறது. இது குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் சிறப்பான இன்னிங்ஸ் குறித்து நினைவுப்படுத்தி கொண்டார். உலகில் மிகவும் ஆபத்தான வீரர் யுவராஜ் சிங் என்றார் ரவி சாஸ்திரி. யுவராஜ் சிங் அந்த சாதனையை புரியும் போது, ரவி சாஸ்திரி வர்ணனையாளராக இருந்தார். அந்தப் போட்டியில் வீடியோவை பகிர்ந்து, "12 வருடங்களுக்கு முன்பு, என் கையில் மைக்ரோஃபோன் இருந்தது, அவர் கையில் ஏதோ மந்திரம் இருந்தது -@YUVSTRONG12" என்று பதிவிட்டார் ரவி சாஸ்திரி.

டி20 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் யுவராஜ் சிங் தான். 18வது ஓவரில் இங்கிலாந்து ஆல் ரவுண்டரான ஆண்ட்ரியூ பிலிண்டாப் உடன் வாதம் ஏற்பட்டது. அதன்பின், ஸ்டுவாட் போர்ட் வீசிய 19வது ஓவரில் 6 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார் யுவராஜ் சிங்.

முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 18வது ஓவரின் முடிவில் 171/3 என்ற நிலையில் இருந்தனர். யுவராஜ் சிங் மற்றும் தோனி இணைந்து டெத் ஓவரில் அதிக ரன்கள் குவிக்க முற்பட்டபோது, ஒரே ஓவரில் 36 ரன்கள் குவிக்கப்பட்டது.

யுவராஜ், 18வது ஓவரில் ஆண்ட்ரூ பிளின்டாப் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளுக்கு அடித்தார். இது இங்கிலாந்து பந்து வீச்சாளரை கோபப்படுத்தியது. இதனால், மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டு பிரச்னையானது.

வாய்மொழி வாக்குவாதம் நடந்ததால், அது யுவராஜைத் ​​தூண்டியது. அடுத்த ஓவரில் அவரின் சுமைகளைத் தாங்கியது ஸ்டூவர்ட் போர்ட்டின் பந்து தான்.

இந்தக் கோவத்தால் யுவராஜ் சிங், 19வது ஓவரில் அதிரடியான சிக்ஸர்கள் அடித்தார்.

யுவராஜ் சிங் 16 பந்தில், 58 ரன்கள் (4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்) அடித்த பிறகு இந்திய அணி 218/4 என்ற ரன்கள் குவித்தது.இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 200/6 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

செப்டம்பர் 24ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி இறுதியில் உலக டி20 சாம்பியனானது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
அணி வீரர்களுடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரி!
அணி வீரர்களுடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரி!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"இரண்டு சிறந்தவர்கள்" - பிசிசிஐ புகைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறை கருத்துகள்
"இரண்டு சிறந்தவர்கள்" - பிசிசிஐ புகைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறை கருத்துகள்
Advertisement