"ஆண்டிகுவாவின் மன்னன்" - விவியன் ரிச்சர்ட்ஸை புகழ்ந்த ரவி சாஸ்திரி!

Updated: 21 August 2019 19:12 IST

புதன்கிழமை புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை ஆன்டிகுவாவின் மன்னர் என்று குறிப்பிட்டார் ரவி சாஸ்திரி.

Ravi Shastri Calls Vivian Richards King Of Antigua, Shares Picture With Him
ரவி சாஸ்திரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விவியன் ரிச்சர்ட்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். © Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் 2021 நவம்பர் 24ம்ம் தேதி வரை மீண்டும் நியமிக்கப்பட்டார். புதன்கிழமை புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை ஆன்டிகுவாவின் மன்னர் என்று குறிப்பிட்டார். இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. அடுத்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 22ம் தேதி ஆண்டிகுவாவில் நடக்கவுள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். ரவி சாஸ்திரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விவியன் ரிச்சர்ட்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "வித் மை மேன். அவர் ராஜ்ஜியத்தில் அவர் தான் ராஜா. ஆண்டிகுவா.@ivivianrichards #WIvIND." என்று பதிவிட்டார்.

ரிச்சர்ட்ஸ் 67, சிறந்த வீரர். 1980 களில் மேற்கிந்திய தீவுகளில் வெல்லமுடியாத வரிசையில் அவர் முக்கியமானவர்.121 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் 8,540 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில்  47 சராசரிவுடன் 6,721 ரன்கள் குவித்துள்ளார்.

இன்னொரு பக்கம், சாஸ்திரி 80 டெஸ்ட்ஸ், 150 ஒருநாள் போட்டிகளை இந்தியாவுக்காக ஆடியுள்ளார். டெஸ்ட்டில் 3,830 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3,108 ரன்களும் குவித்துள்ளார். அதிக ஓவர்கள் கொண்ட போட்டியில் அவர் 151 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 36.04 சராசரியுடன் 129 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஆகஸ்ட் 16ம் தேதி, ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. அவரின் ஒப்பந்தம் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் கபில் தேவ், அன்சுமான் கேக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி உள்ளனர். அணி குறித்து எல்லாம் அறிந்த சாஸ்திரி தான் பயிற்சியாளர் பதவிக்கு சரியானவர் என்று அவர்கள் கூறினார்கள்.

அணிக்கு மீண்டும் அவர் நியமிக்கப்பட்ட பிறகு சாஸ்திரி, "முதலில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இருக்கும் கபில் தேவ், அன்சுமான் கேக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோருக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து அடுத்த 26 மாதங்களுக்கு என்னை நியமித்ததற்கு நன்றி. இந்திய அணியில் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியம் மற்றும் மரியாதை" என்று கூறினார் சாஸ்திரி.

Comments
Advertisement