ஜோ ரூட்டுடன் ஸ்லெட்ஜிங்: கேப்ரியலுக்கு நான்கு ஒருநாள் போட்டியில் ஆட தடை!

Updated: 14 February 2019 12:15 IST

கேப்ரியல், மூன்றாவது டெஸ்ட்டுக்கான ஆட்ட ஊதியத்தில் இருந்து 75 சதவிகித பணத்தை அபராதமாக கட்ட வேண்டும் என்றும், நான்கு ஒருநாள் போட்டி அல்லது ஒரு டெஸ்ட்டில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

Shannon Gabriel Banned For Four ODIs After Joe Root Exchange During West Indies vs England 3rd Test
கேப்ரியல், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுடன் ஈடுபட்ட முறையற்ற வாதத்தின் காரணமாக ஐசிசி விதிகளின் படி 4 ஒருநாள் போட்டிகளில் ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளார். © AFP

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனான் கேப்ரியல், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுடன் ஈடுபட்ட முறையற்ற வாதத்தின் காரணமாக ஐசிசி விதிகளின் படி 4 ஒருநாள் போட்டிகளில் ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

கேப்ரியல், மூன்றாவது டெஸ்ட்டுக்கான ஆட்ட ஊதியத்தில் இருந்து 75 சதவிகித பணத்தை அபராதமாக கட்ட வேண்டும் என்றும், நான்கு ஒருநாள் போட்டி அல்லது ஒரு டெஸ்ட்டில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. கேப்ரியல், களத்தில் என்ன கூறினார் என்பதில் தெளிவில்லை. ஆனால் இவரது உரையாடலுக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் "ஸ்டெம்ப் மைக்கில் அவமானப்படுத்தும் வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். ஓரினைச்சேர்க்கையாளராக இருப்பதில் தவறேதுமில்லை" என்றார்.

இந்த உரையாடலுக்கு ஐசிசி தகவலின்படி " ஐசிசி விதிகள் 2.13ன் படி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது தவறு. மூன்றாவது டெஸ்ட்டில் கேப்ரியலின் நடத்தை தனிநபர் தாக்குதலாக உள்ளது" என்று கூறியுள்ளது.

கேப்ரியலும் ஆட்டம் முடிந்ததும் தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டார். மேலும் தண்டனையையும் ஏற்றுக் கொண்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • கேப்ரியலுக்கு 4 ஒருநாள் போட்டிகளில் ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளது
  • "3வது டெஸ்ட் ஊதியத்தில் 75 சதவிகித பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும்"
  • கேப்ரியல், களத்தில் என்ன கூறினார் என்பதில் தெளிவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
ஜோ ரூட்டுடன் ஸ்லெட்ஜிங்: கேப்ரியலுக்கு நான்கு ஒருநாள் போட்டியில் ஆட தடை!
ஜோ ரூட்டுடன் ஸ்லெட்ஜிங்: கேப்ரியலுக்கு நான்கு ஒருநாள் போட்டியில் ஆட தடை!
ஸ்டம்ப் மைக் விவகாரம்: சர்ச்சைக்குள்ளான சஞ்சய் மஞ்ரேக்கர் ட்விட்!
ஸ்டம்ப் மைக் விவகாரம்: சர்ச்சைக்குள்ளான சஞ்சய் மஞ்ரேக்கர் ட்விட்!
ஸ்லெட்ஜிங் சர்ச்சை :
ஸ்லெட்ஜிங் சர்ச்சை : 'மிஸ்டர் கூலாக' இதயங்களை வென்ற ஜோ ரூட்
Advertisement