"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Updated: 16 May 2019 16:04 IST

ஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டது.

Shane Watson shares a video in Instagram thanking all who prayed for his recovery

ஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவருக்காக வருத்தத்தை வெளிப்படுத்தி ட்விட்டுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தனர். கிரிக்கெட்டுக்காக அவரின் அர்பணிப்பு குறித்தும் பாராட்டப்பட்டது. இன்று வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், "எல்லோருக்கும் வணக்கம். எனக்காக இந்த இரண்டு நாட்களில் அன்பும் ஆதரவும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. மும்பைக்கு எதிராக ஆடிய போட்டியில் சிறு வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டது. அடுத்த வருடமும் ஐபிஎல்லில் ஆட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டிருந்தார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட வாட்சன் சென்னையை வெற்றியின் விளிம்புக்கே அழைத்து சென்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது சி.எஸ்.கே. இந்த போட்டியில் வாட்சன் காயத்துடன் ஆடியதை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். பேட்டிங்கின் போது ஏற்பட்ட காயத்துடன் ஆடிய வாட்சனுக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன.

வாட்சன் முட்டியில் ரத்தம் கசிய ஆடும் புகைப்படத்தை பதிவிட்டார் ஹர்பஜன். அந்த புகைப்படத்தில் வாட்சனின் இடது கால் முட்டியில் மேலே ரத்தம் வழிய ஆடுவது தெரிந்தது.
இந்த பதிவில் ஹர்பஜன் '' அவரது முட்டியில் உள்ள ரத்தத்தை பாருங்கள். 6 தையல் போடப்பட்டுள்ளது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் ஆடியுள்ளார். இதுதான் வாட்சன் போன்ற அனுபவ வீரரின் செயல்" என்று பாராட்டியுள்ளார்.

சி.எஸ்.கே அணிக்காக அபாரமாக ஆடிய வாட்சன் இறுதிப் போட்டியில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியதா தோனி ரன் அவுட்?
ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியதா தோனி ரன் அவுட்?
Advertisement