5 விக்கெட்.. 46 ரன்கள்... மேற்கிந்திய தீவுகளை சிதறடித்த ஷகிப் அல் ஹசன்

Updated: 21 December 2018 20:32 IST

31 வயதான ஷகிப் 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்து பங்களாதேஷ் 211/6 என்ற நிலையை எட்ட உதவினார்.

Bangladesh vs West Indies, 2nd T20I: Shakib Al Hasan Claims Maiden Five-For In Bangladesh
4 ஓவர்கள் வீசி 20 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஷகிப். © AFP

மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஷகிப் அல் ஹசனின் அபார பந்துவீச்சால் பங்களாதேஷ் போட்டியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதுமட்டுமின்றி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.  

31 வயதான ஷகிப் 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்து பங்களாதேஷ் 211/6 என்ற நிலையை எட்ட உதவினார். பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங்கை தனது அபார பந்துவீச்சால் ஷகிப் திணறடித்தார். 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஷகிப்.

மேற்கிந்திய தீவிகள் அணி 175 ரன்கள் குவித்து 19.2 ஓவரில் ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் ரோவ்மென் பவல் 50 ரன்களும், கீமா பவல் 29 ரன்களும் குவித்தனர். 

ஷகிப் தனது சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்தார். இதுபோன்று டி20 போட்டிகளில் பங்களாதேஷ் வீரர் ஒரு 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 3வது முறையாகும்.

டி20 போட்டிகளை வெல்ல வேண்டும் என்றால் எல்லாத்துறைகளிலும் சிறப்பாக ஆட வேண்டும். 200 ரன்களுக்கு மேல் குவித்தது எதிரணியை வீழ்த்தும் நம்பிக்கையை அளித்தது என்றார்.

இது சொந்த மண்ணில் பங்களாதேஷின் அதிகபட்ச ஸ்கோராகும். 1-1 என்று சமநிலையில் உள்ள இந்த தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

(With AFP inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஷாகிப் அல் ஹசன் மீது எந்த அனுதாபமும் இல்லை" - மைக்கேல் வாகன்!
"ஷாகிப் அல் ஹசன் மீது எந்த அனுதாபமும் இல்லை" - மைக்கேல் வாகன்!
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்களை அறிவித்தது பங்களாதேஷ்!
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்களை அறிவித்தது பங்களாதேஷ்!
Shakib Al Hasan-க்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை- ஐசிசி அதிரடி முடிவின் பின்னணி என்ன?
Shakib Al Hasan-க்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை- ஐசிசி அதிரடி முடிவின் பின்னணி என்ன?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
Advertisement