வயது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி

Updated: 03 May 2019 12:39 IST

இன்னும் அப்ரிடிதான் குறைந்த வயதில் சமடித்த வீரர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அப்ரிடியின் பெயரே நீடிக்கிறது.

Shahid Afridi Reveals His Real Age
1975ல் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ள புத்தகத்தில், சதமடித்தது 19 வயதில் என்று கூறியுள்ளார். © File Photo

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 37 பந்தில் சதமடித்தபோது அப்ரிதியின் வயது என்ன என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்து வந்தது. ''பலரும் கூறுவதை போல நான் 16 வயதில் அதிவேக சதமடித்தேன் என்கிறார்கள். இல்லை நான் 19 வயதில் தான் அடித்தேன்" என்று தனது கேம் சேஞ்சர் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். 1975ல் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ள புத்தகத்தில், சதமடித்தது 19 வயதில் என்று கூறியுள்ளார்.

பல வருடங்களாக அப்ரிடியின் உண்மையான வயது என்ன என்பது குறித்த விவாதங்கள் நடந்து வந்தன. பலமுறை தனது ஓய்வை அறிவித்துவிட்டு, பின்னர் அணிக்கு திரும்புவதும் அப்ரிடியை விவாதப்பொருளாக வைத்திருந்தது. 

சமீபத்திய சர்ச்சையாக அவர் 1975ல் பிறக்கவில்லை, 1980ல் பிறந்தார் என்ற சர்ச்சை நீடித்து வந்தது. அதிகாரப்பூர்வமாக அவர் 21வயதில் தான் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார். 19 வயதில் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இன்னும் அப்ரிடிதான் குறைந்த வயதில் சமடித்த வீரர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அப்ரிடியின் பெயரே நீடிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் உஸ்மான் கானி 17 வயதில் ஜிம்பாப்வேயுடன் சதமடித்தார். இருப்பினும் அப்ரிடியே முதலிடத்தில் உள்ளார்.

அப்ரிடி, 2016 டி20 உலகக் கோப்பையோடு ஓய்வு பெற்றார். அப்போது வாக்கார் யூனிஸ் மற்றும் ஜாவெத் மியாந்தத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

சமீபத்தில் ட்விட்டரில் "கேம் சேஞ்சர் புத்தகம் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஆனால் ஊடகங்களின் மிகப்படுத்துதலுக்கு செவிசாய்க்காதீர்கள்" என்று குறிப்பிட்டுருந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • அப்ரிதியின் வயது என்ன என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்து வந்தது
  • 19 வயதில் தான் சதம் அடித்தேன் என்று கேம்சேஞ்சர் புத்தகத்தில் உள்ளது
  • 21 வயதில் தான் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார் அப்ரிதி
தொடர்புடைய கட்டுரைகள்
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இரங்கல்!
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இரங்கல்!
அப்ரிடியின் சாதனையை கிண்டல் செய்த இங்கிலாந்து வீரரிடம் கோபப்பட்ட ரசிகர்கள்!
அப்ரிடியின் சாதனையை கிண்டல் செய்த இங்கிலாந்து வீரரிடம் கோபப்பட்ட ரசிகர்கள்!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கு ஐபிஎல் தான் காரணம்" - அப்ரிடி!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கு ஐபிஎல் தான் காரணம்" - அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"பைத்தியமா?" - இரண்டாவது ரன் கேட்ட ரியாஸுக்கு நக்கலாக பதிலளித்த அஃப்ரிடி!
"பைத்தியமா?" - இரண்டாவது ரன் கேட்ட ரியாஸுக்கு நக்கலாக பதிலளித்த அஃப்ரிடி!
Advertisement