"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!

Updated: 23 August 2019 18:27 IST

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக், தற்போதைய கேப்டனான விராட் கோலியை "சிறந்த பேட்ஸ்மேன்" என்று பாராட்டியுள்ளார்.

Virender Sehwag Reveals One Sachin Tendulkar Record No One, Including Virat Kohli, Can Break
சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை கோலி முறியடிப்பார் என்று நினைக்கிறேன் - சேவாக். © AFP

விராட் கோலி ஏற்கனவே விளையாட்டின் சிறந்தவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக், தற்போதைய கேப்டனான விராட் கோலியை "சிறந்த பேட்ஸ்மேன்" என்று பாராட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ள கோலியை பாராட்டியதோடு, டெண்டுல்கரின் ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகள் ஆடிய வீரர் என்ற சாதனையை சச்சின் பெற்றுள்ளார். அவர் 200 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளார். இரண்டாவது இடத்தில் 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலி இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6,613 ரன்கள் குவித்துள்ளார். இதில், 25 சதங்கள் அடங்கும்.

"இந்த சமயத்தில், விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன். அவர் சதமடிக்கும் முறை, ரன்கள் குவிக்கும் திறன், அவர் தான் சிறந்தவர். அவர் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நினைக்கிறேன்," என்றார் சேவாக்.

"சச்சின் டெண்டுல்கரின்  200 டெஸ்ட் போட்டிகள் ஆடியவர் என்ற சாதனையை யாராலும் முறியடிக்க முடியது. 200 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் யாராலும் விளையாட முடியாது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

உலகக் கோப்பையில் ஐந்து அரைசதங்கள் எடுத்த விராட் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு சதங்களை குவித்தார்.

விராட் கோலி ஒருநாள் கோலி ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் குவித்துள்ளார். சச்சின் சாதனையை எட்ட இன்னும் 6 சதங்கள் தேவைப்படுகிறது. 7 சதங்கள் அடித்தால் அவர் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.

இப்போது நடக்கும் டெஸ்ட் போட்டி உட்பட விராட் கோலி 78 டெஸ்ட்களில் 25 சதங்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் ஆடி 51 சதங்கள் குவித்துள்ளார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்
"நிஜ வாழ்க்கையில் சதமடிக்க நான் பிரார்த்திக்கிறேன்" - கும்ளேவை வாழ்த்திய சேவாக்
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
சேவாக் விமர்சிக்கப்பட்ட ட்விட்டை ரீ-ட்விட் செய்த ரவீந்திர ஜடேஜா!
சேவாக் விமர்சிக்கப்பட்ட ட்விட்டை ரீ-ட்விட் செய்த ரவீந்திர ஜடேஜா!
Advertisement