ஸ்கோர்கார்டு அழுத்தம் தான் தோல்விக்கு காரணம் - க்ருணால் பாண்ட்யா!

Updated: 07 February 2019 12:10 IST

ஆக்லாந்து போட்டியில் எல்லா தவறுகளையும் சரி செய்து வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Krunal Pandya Says Target Wasn
© AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நடந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் 20 ரன்கள் குவித்தது மட்டுமின்றி ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யா அணியின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதில் இலக்கு அதிகமாக இருந்தது. ஸ்கோர்கார்டு அழுத்தமே தோல்விக்கு காரணம் என்று கூறினார். அதே போல பந்துவீச்சில் நடுவரிசை ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என்றும் தெரிவித்தார்.

பவர்ப்ளே ஓவர்களிலும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததை குறிப்பிட்டார். மோசமான பந்துவீச்சும், நியூசிலாந்தின் சிறப்பான பேட்டிங்கும் தோல்விக்கு அழைத்து சென்றதாக கூறினார்.

தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இரண்டு கேட்ச்களை தவறவிட்டனர். செய்ஃபெர்ட்டுக்கு தோனி தவறவிட்ட கேட்ச்சால் அவர் 43 பந்தில் 84 ரன் குவித்தார். அதுதான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

தட்பவெப்ப நிலை ஆட்டத்தின் போக்கை மாற்றியதா என்ற கேள்விக்கு இல்லை அதெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி 17 ரன்களவிட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார் என்றார் க்ருணால் பாண்ட்யா.

ஆக்லாந்து போட்டியில் எல்லா தவறுகளையும் சரி செய்து வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் டி20 போட்டியை இந்தியா 80 ரன்கல் வித்தியாசத்தில் தோற்றது
  • இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் பாண்ட்யா
  • இந்தியா 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தது
தொடர்புடைய கட்டுரைகள்
ஹர்திக் மற்றும் நடாசாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் மற்றும் நடாசாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன க்ருணால் பாண்ட்யா!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
Advertisement