ஸ்டம்ப் மைக் விவகாரம்: சர்ச்சைக்குள்ளான சஞ்சய் மஞ்ரேக்கர் ட்விட்!

Updated: 13 February 2019 14:06 IST

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் மற்றும் கேப்ரியல் இடையேயான ஸ்லெட்ஜிங் தொடர்பான கருத்துக்கு மஞ்ரேக்கரின் கருத்து விமர்சனத்துக்குள்ளானது

West Indies vs England: Sanjay Manjrekar Savagely Trolled For "Bizarre" Tweet Questioning Use Of Stump Mics
"ஐசிசி கட்டாயம் ஸ்டம்ப் மைக்குகளால் ஆட்டத்துக்கு நல்லதா கெட்டதா என்பதை யோசிக்க வேண்டும்" என்ற சஞ்சய் மஞ்ரேக்கரின் கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. © Twitter

சஞ்சய் மஞ்ரேக்கரின் கருத்துக்களுக்கு எப்போதுமே ட்விட்டரில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் சஞ்சய் மஞ்ரேக்கரின் சமீபத்திய ட்விட் ஒன்று கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் மற்றும் கேப்ரியல் இடையேயான ஸ்லெட்ஜிங் தொடர்பான கருத்துக்கு மஞ்ரேக்கரின் கருத்து விமர்சனத்துக்குள்ளானது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வீரர் கேப்ரியல் ரூட்டை நோக்கி ஓரினச் சேர்க்கை தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அதற்கு ரூட் ஸ்டம்ப் மைக்கில் "இதனை கிண்டல் செய்யாதீர்கள். ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை" என தெரிவித்தது சர்ச்சையானது.

இந்த சம்பவத்தை சமீபத்தில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா தொடரில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் தென்னாப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவை பார்த்து நிறவெறி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்திய சம்பவத்தோடு ஒப்பிட்டார். மேலும் "ஐசிசி கட்டாயம் ஸ்டம்ப் மைக்குகளால் ஆட்டத்துக்கு நல்லதா கெட்டதா என்பதை யோசிக்க வேண்டும்" என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது.

"ஸ்டம்ப் மைக்குகளை ஒழித்தால் இந்த உரையாடல்கள் ஒழிந்துவிடுமா... அதேபோல கேமராக்களை ஒழித்தால் பந்தை சேதப்படுத்துவது நின்றுவிடுமா" போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

கேப்ரியலின் கருத்துகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகவில்லை. ரூட்டும் கேப்ரியல் என்ன கூறினார் என்பதை கூற மறுத்துவிட்டார். அதனை அவர் உணர்ந்தாலே போதும் என்றார்.

"இது டெஸ்ட் கிரிக்கெட். மேலும் அவர் எமோஷனலானவர் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர்ம் இது போன்ற விஷயங்கள் தவிர அவர் நல்ல மனிதர்" என்றார்.

இதுபோன்ற செயலுக்காக பாகிஸ்தான் கேப்டனுக்கு 4 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சஞ்சய் மஞ்ரேக்கரின் ட்விட் ஒன்று கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
  • சஞ்சய் மஞ்ரேக்கர் ஸ்டம்ப் மைக்குகள் குறித்து கேள்வி எழுப்பினார்
  • ஜோ ரூட் மற்றும் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்: கருத்து தெரிவித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
தொடர்புடைய கட்டுரைகள்
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
"அன்ப்ளாக் செய்யுங்கள்" மஞ்ரேக்கரை கலாய்த்த மைக்கேல் வாகன்
"அன்ப்ளாக் செய்யுங்கள்" மஞ்ரேக்கரை கலாய்த்த மைக்கேல் வாகன்
“போதும், போதும் நிறுத்துங்க!”- தன்னை விமர்சித்த முன்னாள் வீரருக்கு ஜடேஜா கொடுத்த ‘பன்ச்’
“போதும், போதும் நிறுத்துங்க!”- தன்னை விமர்சித்த முன்னாள் வீரருக்கு ஜடேஜா கொடுத்த ‘பன்ச்’
Advertisement