சர்ச்சையான ட்விட்: ரசிகர்களிடம் சிக்கிய சஞ்சய் மஞ்ரேக்கர்!

Updated: 04 March 2019 19:17 IST

மஞ்ரேக்கர் ''50 ஓவர் போட்டிகள் 10 ஓவர் அதிகமாக உள்ளது போல் தோற்றமளிக்கிறது'' என ட்விட் செய்ய உங்கள் வர்ணனையும் அப்படித்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் சரமாரியாக ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

Sanjay Manjrekar Roasted By Fans For His Comments On ODI Format
''50 ஓவர் போட்டிகள் 10 ஓவர் அதிகமாக உள்ளது போல் தோற்றமளிக்கிறது'' என ட்விட் செய்திருந்தார் மஞ்ரேக்கர். © Twitter

கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான மஞ்ரேக்கரின் ட்விட் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஹைத்ராபாத் ஒருநாள் போட்டியின் போது மஞ்ரேக்கர் ''50 ஓவர் போட்டிகள் 10 ஓவர் அதிகமாக உள்ளது போல் தோற்றமளிக்கிறது'' என ட்விட் செய்ய உங்கள் வர்ணனையும் அப்படித்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் சரமாரியாக ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

இவரது கருத்தை தாண்டி, தோனி மற்றும் ஜாதவின் ஆட்டம் அருமையாக இருந்தது. இதனால் இந்தியா இந்த போட்டியை எளிதாக வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கவாஜா 50, மேக்ஸ்வெல் 40, ஸ்டோனின்ஸ் 37 என ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 236 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர், 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா ரன் ஏதும் எடுக்காமலேயே தவானை இழந்தது. பின்னர் பொறுப்புடன் ஆடிய கோலி 44 ரன்களையும், ரோஹித் 35 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த தோனி ஜாதவ் இணை கூட்டாக 141 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. தோனி 59 ரன்களுடனும், ஜாதவ் 81 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் கோல்டர்நைல் , ஸம்பா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • 50 ஓவர் போட்டிகள் குறித்து மஞ்ரேக்கர் கூறியது விமர்சனத்துக்குள்ளானது
  • 50 ஓவர் போட்டிகள் 10 ஓவர் அதிகமாக உள்ளது போல் உள்ளது: மஞ்ரேக்கர்
  • மஞ்ரேக்கரின் கருத்துக்கு ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல். ராகுலின் 360 டிகிரி’ பேட்டிங்கை பாராட்டிய சஞ்சய் மஞ்ச்ரேகர்
கே.எல். ராகுலின் '360 டிகிரி’ பேட்டிங்கை பாராட்டிய சஞ்சய் மஞ்ச்ரேகர்
"ஆய்வாளராகவும், வர்ணனையாளராகவும் எனக்கு மிக மோசமான ஆண்டு"  - சஞ்சய் மஞ்ச்ரேகர்
"ஆய்வாளராகவும், வர்ணனையாளராகவும் எனக்கு மிக மோசமான ஆண்டு" - சஞ்சய் மஞ்ச்ரேகர்
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
Advertisement