திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!

Updated: 20 August 2019 15:15 IST

திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பகிர்ந்து, "பேச்சுலராக இன்று கடைசி நாள். எதிர்நோக்கியுள்ளேன்." என்று பதிவிட்டார்.

Sania Mirza
ஹசந் அலி ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பகிர்ந்து, "பேச்சுலராக இன்று கடைசி நாள். எதிர்நோக்கியுள்ளேன்." என்று பதிவிட்டார். © Twitter

திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பகிர்ந்து, "பேச்சுலராக இன்று கடைசி நாள். எதிர்நோக்கியுள்ளேன்." என்று பதிவிட்டார். ஹசன் அலி இந்திய பெண்ணான ஷாமியா அர்சூவை இன்று துபாயில் திருமணம் செய்யவுள்ளார். ஹசன் அலியின் ட்விட்டுக்கு பதிலளித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.  "வாழ்த்துக்கள் ஹசன், வாழ்நாள் முழுவதும் அன்பும் சந்தோஷமும் நிறைந்திருங்கள்...  இந்த முறை எங்களை அதிகம் கவனிக்க வேண்டியுள்ளது," என்று பதிவிட்டார் சானியா மிர்ஸா. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

ஹசன் அலி,  ஷாமியா அர்சூ இருவரின் திருமணம் குறித்து பல யூகங்கள் இருந்தது. கடந்த மாதால், பல செய்திகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இந்திய பெண்ணை மணக்கவுள்ளார் என்று பரவியது.

இருந்தாலும், கடந்த ஜூன் 30ம் தேதி ஹசன் அலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், திருமணம் இன்னும் உறுதியாகவில்லை என்றும், கூடிய விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்தார். 

அதன்பின், ஹசன் அலி, எல்லா யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமண செய்தியை உறுதி செய்தார்.

"எங்கள் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பெரிதும் வெளிப்படுத்த விரும்பவில்லை. அதனால் தான் தகவல் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால், என் திருமணம் குறித்த வதந்திகள் பரவ தொடங்கிய பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்க நினைத்தேன்" என்று ஹசன் தன் சொந்த ஊரான குஜ்ரன்வாலா(பாகிஸ்தான்) செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

"நான் கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஷெர்வானி அணிகிறேன், அவர் இந்திய முறைப்படி உடை அணியவுள்ளார்," என்று ஹசன் கூறினார்.

ஹசன், ஹாமியாவை நெருங்கிய நண்பர் மூலம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு துபாயில் சந்தித்துள்ளார். அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஹசன் ஜூலை 30ம் தேதி, திருமணம் இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அதற்காக அறிவிப்பு வரும் என்று ட்விட் செய்திருந்தார்.

ஹசன், இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டு சேம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால், கடந்த சில வருடங்களில் அவரின் செயல்பாடு சரிந்துள்ளது. 25 வயதான இவர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முயன்றும் தோற்றதால், ஆடும் லெவனில் இருந்து பாதி தொடரில் வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை ஏப்ரல் 12, 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அக்டோபர் 30, 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இஸான் மிர்சா-மாலிக் என்று பெயரிட்டனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவமானம்": ரேம்ப் வாக்கில் கலந்துகொண்ட ஹசன் அலியையை விமர்சித்த ரசிகர்கள்
"அவமானம்": ரேம்ப் வாக்கில் கலந்துகொண்ட ஹசன் அலியையை விமர்சித்த ரசிகர்கள்
"நாங்கள் கணவன்-மனைவி இல்லை" - ஹசன் அலி குறித்த கேள்விக்கு சதாப் கானின் பதில்!
"நாங்கள் கணவன்-மனைவி இல்லை" - ஹசன் அலி குறித்த கேள்விக்கு சதாப் கானின் பதில்!
துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
துபாயில் நடந்த ஹசன் அலி-ஷாமியா அர்சூ திருமணம்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
இந்திய பெண்ணை மணக்கும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி!
இந்திய பெண்ணை மணக்கும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி!
Advertisement