ஐபில் 2019-ன் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் சாம் குரான்

Updated: 02 April 2019 12:32 IST

குரான் வெறும் இரண்டு போட்டிகள் அனுபவம் உள்ள ஐபிஎல் வீரர்தான். ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sam Curran Claims First Hat-Trick Of IPL 2019
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் சாம் குரான் ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். © BCCI/IPL

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் சாம் குரான் ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை அவர் படைத்தார். டெல்லி அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தி டெல்லியை 152 ரன்களுக்கு சுருட்ட உதவினார். இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 18வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேலையும், 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரபாடா மற்றும் லாமிசனேவை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

குரான் வெறும் இரண்டு போட்டிகள் அனுபவம் உள்ள ஐபிஎல் வீரர்தான். ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சாம் குரான் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர். டெல்லிக்கு எதிரான போட்டியில் 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி 144 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற நிலைக்கு சென்றது. 8 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. பன்ட் மற்றும் இங்ராம் எளிதாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆட்டமிழக்க பஞ்சாப் பக்கம் ஆட்டம் மாறியது. 

சாம் குரான் பேட்டிங்கில் 10 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். 20 வயதான குரான் 48 டி20 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

Comments
ஹைலைட்ஸ்
  • குரான் வெறும் இரண்டு போட்டிகள் அனுபவம் உள்ள ஐபிஎல் வீரர்
  • சாம் குரான் ஐபிஎல் 2019 தொடரின் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்
  • ஹர்ஷல் பட்டேல், ரபாடா மற்றும் லாமிசனே ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்
தொடர்புடைய கட்டுரைகள்
சாம் குரானின் ஸ்கூல் பாய் படத்தை வைரலாக்கிய கெயில்!
சாம் குரானின் ஸ்கூல் பாய் படத்தை வைரலாக்கிய கெயில்!
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
சாம் குரானின் ஹாட்ரிக்கால் டெல்லியை மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்
சாம் குரானின் ஹாட்ரிக்கால் டெல்லியை மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஐபில் 2019-ன் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் சாம் குரான்
ஐபில் 2019-ன் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் சாம் குரான்
ஐபிஎல் 2019: அதிகம் ஏலம் போன ஐந்து வீரர்கள்!
ஐபிஎல் 2019: அதிகம் ஏலம் போன ஐந்து வீரர்கள்!
Advertisement